ஹவ்காங் குடியிருப்பில் ஆடவர் சடலம்

ஹவ்காங் குடியிருப்பில் ஆடவர் சடலம்

1 mins read
5aa45042-efea-4d8e-a2f9-5cf583a264f1
படம்: கூகள் வரைப்படம் -

ஹவ்காங்கில் உள்ள ஒரு வீட்டில் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 'தி ஃபுளோரிடா' எனும் கூட்டுரிமை வீட்டு வளாகத்தின் இரண்டாவது மாடியில் 26 வயது நபரின் உடல் காணப்பட்டது. இந்தச் சம்பவம் ஜூலை 13 அன்று நடந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

காலை 4 மணியளவில் ஒரு பலத்த சத்தம் கேட்டு தான் கண் விழித்ததாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். 'டமார்' எனும் சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது வீட்டு சன்னல்களில் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபற்றி அதிகம் யோசிக்காமல் மீண்டும் தான் உறங்க சென்றதாக அவர் கூறினார். காலை 7 மணிக்கு எழுந்தபோது, இரண்டாவது மாடி தளத்தில் ஒரு ஆடவர் ரத்த வெள்ளத்தில் இருப்பதை தான் கண்டதாக அவர் சொன்னார்.

இது இயற்கைக்கு மாறான சம்பவம் அல்ல என்று காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.