சிங்கப்பூருக்கு 6 மி. சுற்றுப்பயணிகள் வருகையளிக்கக்கூடும்

சிங்கப்பூருக்கு 6 மி. சுற்றுப்பயணிகள் வருகையளிக்கக்கூடும்

1 mins read
3fa8c042-730e-4b69-97ef-df9ad67628df
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்கு இவ்வாண்டு நான்கு முதல் ஆறு மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகையளிக்கக்கூடும் என சிங்கப்பூர் பயணத்துறை அமைப்பு எதிர்பார்க்கிறது.

இந்தாண்டு முதல்பாதியில் 1.5மில்லியன் சுற்றுப்பயணிகள் இங்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான பயணிகள் இந்தோனீசியா, இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் சராசரியாக 7.1 நாள்கள் இங்கு தங்குகின்றனர்.

இவ்வாண்டு முதல் நான்கு மாதங்களில் சுற்றுப்பயணிகள் கிட்டத்தட்ட 1.3 பில்லியனை இங்கு செலவிட்டனர்.