ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் கூடுதல் முதலீடு, புத்தாக்கம்

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் கூடுதல் முதலீடு, புத்தாக்கம்

1 mins read
a15ac174-2d1a-4b89-b112-e71a30381808
ஜி20சந்திப்புகளில்கலந்துகொள்ளபாலிசென்றுள்ள துணைப்பிரதமர்லாரன்ஸ்வோங்குடன்இந்தியாவின்நிதி அமைச்சர்நிர்மலாசீதாராமன்.படம்: லாரன்ஸ்வோங்/டுவிட்டர் -

ஆசியா, பசி­பிக் வட்­டா­ரங்­க­ளின் வள­ரும் நாடு­களில் தனி­யார் துறை சார்ந்த மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் தொடர்­பில் கூடு­தல் முத­லீட்டை ஊக்­கு­விக்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரு­டன் ஆசிய மேம்­பாட்டு வங்கி (ஏடிபி) அதன் ஒப்­பந்­தம் ஒன்­றைப் புதுப்­பித்து உள்­ளது.

புதிய ஒப்­பந்­தத்­தின்­படி ஆளுமை மற்­றும் பொதுக் கொள்கை, தனி­யார் துறை வளர்ச்சி, பரு­வ­நிலை மாற்­றம் ஆகிய அம்­சங்­கள் தொடர்­பான தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் நிலை­யும் ஒத்­து­ழைப்­பும் மேம்­படும்.

இதற்­காக சிங்­கப்­பூ­ரின் பொது மற்­றும் தனி­யார் துறை­க­ளின் மூலம் முத­லீடு, நிதி­யு­தவி, நிர்­வா­கத் திறன்­கள், தொழில்­நுட்­பங்­கள் ஆகி­ய­வற்றை வள­ரும் ஏடிபி உறுப்பு நாடு­க­ளின் தனி­யார் துறை மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்று சிங்­கப்­பூ­ரின் நிதி அமைச்சு தெரி­வித்­தது.

இந்த வள­ரும் உறுப்பு நாடு­களில் இலங்கை, சீனா, மியன்­மார் ஆகி­யவை அடங்­கும் என்று கூறப்­பட்­டது. புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் பயன்­பாட்­டை­யும் புத்­தாக்­கச் செயல்­மு­றை­க­ளை­யும் ஊக்­கு­விப்­ப­தற்கு ஏடி­பி­யு­டன் சிங்­கப்­பூர் இணைந்து ஒத்­து­ழைக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் ஏடிபி அலு­வ­ல­கம் 2020ல் திறக்­கப்­பட்­டது. புதிய ஒப்­பந்­தப்­படி ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­து­வ­தில் அலு­வ­ல­கம் முக்­கி­யப் பங்கு வகிக்­கும் என்­றது அமைச்சு. சிங்­கப்­பூ­ரின் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், ஏடிபி தலை­வர் மசட்­சுகு அச­காவா ஆகிய இரு­வரும் நேற்று மாலை ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர். ஏடி­பி­யின் செயல்­பாட்­டைப் பாராட்­டி­யும் இருந்­தார் திரு வோங்.