ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவுக்காக வழிவிட செந்தோசாவின் பழைய இசை நீருற்று 2007ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது. ஆனால், புதிய கடற்கரைச் சந்தையின் ஓர் அங்கமாக அது மீண்டும் இவ்வாண்டின் பிற்பாதியில் செந்தோசாவுக்கு வரவுள்ளதாக மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப் நேற்று அறிவித்தது. இரவுபகலாக இயங்கவுள்ள அந்தச் சந்தையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்களில் தென்கிழக்காசியாவின் ஆக உயரமான நீருற்று, பல்வகை உணவு, பானங்கள் கிடைக்கும் சூழல் ஆகியவை அடங்கும். நீர்மட்டத்திற்கு மேல் சுமார் 80 மீட்டர் உயரம் வரை நீருற்று எழும் என்று தெரிவிக்கப்பட்டது. உலக நாடுகளைப் பிரதிநிதிக்கும் வகையில் பலதரப்பட்ட உணவுவகைகளும் இங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 1982ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட பழைய நீருற்று சிங்கப்பூரர்கள் மனதைக் கொள்ளை கொண்ட காலம் மீண்டும் திரும்பவுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
செந்தோசாவில் மீண்டும் இசை நீருற்று
1 mins read
-

