வரி ஏய்ப்பு செய்து மது விற்றவருக்கு $28 மில்லியன் அபராதம்

வரி ஏய்ப்பு செய்து மது விற்றவருக்கு $28 மில்லியன் அபராதம்

2 mins read
5ec277e0-dbe1-4750-a2fd-fb4050cff77c
-

சிங்­கப்­பூ­ருக்கு வரும் கப்­பல் களுக்கு விற்­கப்­பட இருந்த மது­வுக்கு வரி செலுத்­தாது, உள்நாட்டில் விற்­கத் திட்­டம் தீட்டிய­வர்­களில் ஒரு­வ­ருக்கு 28 மில்­லி­யன் வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் ஆக நீண்­ட­கா­லத்­துக்கும் ஆகப் பெரிய அள­விலும் கும்­ப­லாக வரி ஏய்ப்பு செய்து மது விற்­ற­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­செ­யல் அது.

அந்த வரி செலுத்­தாத மது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல் விற்­கப்­பட்­டது.

அதன்­மூ­லம் மொத்­தம் 25 மில்­லி­யன் வரி ஏய்ப்பு நடந்­தது. சுங்­க­வரி, பொருள் சேவை வரி ஏய்ப்பு ஆகி­யவை இதில் அடங்­கும்.

வெளி­நாட்­டுக் கப்­பல்­களில் வேலை செய்­வோ­ருக்கு மரினா சவுத் துறைமுகம், பெஞ்­சூரு பட­குத்­து­றை­யி­லி­ருந்து விற்க அனு­ ம­திக்­கப்­பட்ட மது சட்­ட­வி­ரோ­த­மாக உள்­ளூ­ரில் விற்­கப்­பட்­டது.

திட்­டம் தீட்­டிய இரு­வ­ரில் ஒரு­வர் லிம் வெய் லுவென், 41. சுங்­கத்­துறை சட்­டத்­தின்­கீழ், $3,114,858.16 மதிப்­புள்ள சுங்­க­வரி, பொருள் சேவை வரி ஏய்ப்பு செய்­த தன் தொடர்­பில் இரண்டு குற்­றங்­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

தண்­டனை விதிப்­பின்­போது மேலும் 16 குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

லிம்­முக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தம் $28,033,723.44 ஆகும். இது அவர் வரி ஏய்ப்பு செய்த தொகை­யை­விட ஒன்­பது மடங்கு அதி­க­மான தொகையாகும்

அப­ரா­தத்­தைச் செலுத்த முடியா­ விட்­டால், லிம் ஆறு ஆண்­டு­கள், எட்டு மாதங்­கள் சிறை­யில் இருக்க வேண்­டி­யி­ருக்­கும்.

திட்­டம் தீட்­டிய மற்­றொ­ரு­வ­ரான, முகம்மது ரிது­வான் டியோ என்று அறி­யப்­படும் டியோ டியென் சூன்­னுக்கு முன்­ன­தாக ஓராண்டு சிறைத்­தண்­ட­னை­யும் கிட்­டத்­தட்ட $48 மில்­லி­யன் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. இதில் தொடர்­புள்ள மேலும் சில­ருக்கு ஏற்­கெ­னவே தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.