கழிவுநீரிலிருந்து போஸ்பரசை அகற்ற புதிய வழிமுறை

கழிவுநீரிலிருந்து போஸ்பரசை அகற்ற புதிய வழிமுறை

1 mins read
e6f0eaea-cfb9-42f3-8c4c-f7a3d7c06109
சுற்றுச்சூழல் மாற்றங்களும் அதிகப் பாசி படர்வதற்குக் காரணம் என்று கூறினார் விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் ஸ்டெஃபான் வெர்ட்ஸ். படம்: சுற்­றுப்­புற உயிர் அறி­வி­யல் பொறி­யி­ய­லுக்­கான சிங்­கப்­பூர் நிலை­யம் -

நுண்­கி­ரு­மி­க­ளைப் பயன்­ப­டுத்தி கழி­வு­நீ­ரி­லி­ருந்து போஸ்­ப­ரஸ் எனப்­படும் எரி­மத்தை நீக்­கும் புதிய வழி­மு­றையை உள்­ளூர் விஞ்­ஞா­னி­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல் ­க­லைக்­க­ழ­கத்­தின் சுற்­றுப்­புற உயிர் அறி­வி­யல் பொறி­யி­ய­லுக்­கான சிங்­கப்­பூர் நிலை­யத்­தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் இதை உரு­வாக்­கி­னர்.

இத­னால் போஸ்­ப­ரஸ் கனி­மத்­தால் பாசி திடீ­ரென்று வேக­மாக பெரு­கு­வ­தைத் தடுக்க முடி­யும். சிங்­கப்­பூர் போன்ற வெப்­ப­மண்­டல நாடு­களில் உள்ள வெப்­ப­நீ­ரில் பாசி அதி­கம் பட­ரக்­கூ­டும்.

பாசி படர்­வ­தால் தண்­ணீ­ரில் உள்ள உயிர்­வாயு குறை­யும். கடல் விலங்­கு­க­ளைக் கொல்­லும் அதிக நச்சை அந்­தப் பாசி வெளி­யாக்­கும். இத­னால் தண்­ணீ­ரி­லி­ருந்து போஸ்­ப­ரஸை நீக்­கு­வது முக்­கி­யம்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள கழி­வு­நீ­ரி­லி­ருந்து போஸ்­ப­ரஸ் அகற்­றப்­ப­டு­வ­தில்லை என்று அறி­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது. சிங்­கப்­பூ­ரின் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட கழிவு நீரில் போஸ்­ப­ரஸ் இருப்­ப­தால் குடி­நீ­ருக்கோ இங்­குள்ள கடல் நீருக்கோ எந்த பாதிப்­பும் இல்லை.

ஆனால் தனது சுத்­தி­க­ரிப்பு ஆலை­களில் தற்­செ­ய­லாக போஸ்­ப­ரஸ் அகற்­றப்­ப­டு­வ­தைக் கவ­னித்த பொதுப் பய­னீட்­டுக் கழ­கம், அது குறித்து நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலை விஞ்­ஞா­னி­க­ளு­டன் பணி­யாற்­றி­யது.

போஸ்­ப­ரஸை நீக்­கும் கிரு­மி­கள் யாவை என்று விஞ்­ஞானி­கள் கண்டு­பி­டித்­த­னர்.