வெளிநாட்டு வாகனங்களை வைத்திருக்க முடியாது: மாற்றத்துக்கு பழகிக்கொள்ளும் மலேசியர்கள்

அருணா கந்­த­சாமி

வேலை அனு­ம­தி­யில் சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் மலே­சி­ய­ரான நரேன்­ராஜ் ரமேஷ், 25, தாம­த­மாக வேலை முடி­யும்­போது இனி சிங்­கப்­பூ­ரில் அவ­ச­ரத்­துக்­குக்­கூட இரவு தங்க முடி­யாது.

நீண்­ட­நே­ரம் வேலை செய்­யும் தம்­மைப் போன்­ற­வர்­கள் அச­தி­யோடு வீடு திரும்ப வேண்டி இருப்­ப­தாக தமிழ் முர­சி­டம் கூறி­னார் மளி­கைக் கடை­யில் பணி­யாற்­றும் நரேன்­ராஜ்.

இதற்­குக் கார­ணம் வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள் வெளி­நாட்­டில் பதிவு செய்­யப்­பட்ட வாக­னங்­களை சிங்­கப்­பூ­ரில் நிரந்­த­ர­மாக வைத்­துக்­கொள்ள முடி­யாது என்ற விதி­முறை.

அத்­து­டன், வெளி­நாட்டு வாக­னங்­கள் தின­மும் குறைந்­தது 6 மணி நேரம் சிங்­கப்­பூரை விட்டு வெளி­யா­க­வேண்­டும். ஜூலை 1ஆம் தேதி அந்த விதி­மு­றை­கள் நடப்­புக்கு வந்­தன.

கடந்த சில வாரங்­க­ளாக சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லி­ருக்­கும் நில சுங்­கச்­சா­வ­டி­களில் அதிக நெரி­சல் ஏற்­பட்­டதை அடுத்து சிங்­கப்­பூ­ருக்­குள் வரும் வாக­னங்­க­ளைக் குறைக்க நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இந்த விதி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

"சிங்­கப்­பூ­ரில் மோட்­டார் வாக­னங்­களை ஓட்­டும் மலே­சி­யர் களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கிறது. ஆக அர­சாங்­கம் விபத்­து­க­ளைக் குறைக்­க­வும் வாக­னங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடிவு செய்­தி­ருக்­கக் கூடும்," என்­றார் விற்­பனை உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் மலே­சி­யர் கு.வினோத் குமார், 27. அர­சாங்­கம் மக்­க­ளின் நலன் கருதி இந்த நட­வ­டிக்­கையை எடுத்­தி­ருக்­கிறது என்று உறு­தி­யாக நம்­பு­வ­தாய் அவர் குறிப்­பிட்­டார்.

இந்த சட்­டத்­தால் தனக்கு எந்த பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை என்­றா­லும் நண்­பர்­க­ளி­ட­மி­ருந்­தும் சமூக ஊட­கங்­க­ளி­லி­ருந்­தும் இந்த பிரச்­ச­னை­யின் தாக்­கத்­தைப் புரிந்­து­கொண்­டா­கக் கூறி­னார் உண­வுத் துறை­யில் பணி­பு­ரி­யும் சு.கும­ரே­சன், 29.

அவர் தமது குடும்­பத்­தி­ன­ரு­டன் சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருப்­ப­தால் தின­மும் மலே­சி­யா­வுக்கு செல்­லும் கட்­டா­யம் இல்லை என்று கூறி­னார்.

"குடும்­பத்­தோடு சிங்­கப்­பூ­ருக்கு இடம்­பெ­யர்ந்­தால் பயண அலைச்­ச­லைக் குறைப்­ப­தோடு எரி­வாயு செல­வு­க­ளை­யும் குறைக்­க­லாம். மலே­சி­யா­விற்­குச் சென்று வரு­வ­தற்­குக் குறைந்­தது $10 செல­வா­கும்," என்­றார் அவர்.

தின­மும் மலே­சி­யா­விற்­குப் பய­ணம் செய்­யும் கார்த்­தி­கே­சன் செல்­வ­ராஜ், 31, இந்த புதிய விதி­முறை தம்­மைப் பாதிக்­க­வில்லை என்­றார்.

முடி திருத்­து­ப­வ­ரா­கப் பணி­பு­ரி­யும் அவர், "என்­னு­டைய வேலை அவ­கா­சம் தின­மும் பத்து மணி நேரம். ஆக வேலையை முடித்­து­விட்டு வீடு திரும்ப நிறைய நேரம் இருக்­கும். ஆனால் என்­னு­டைய நண்­பர்­கள் இந்த செய்தி முதன்­மு­த­லில் வெளி­வந்­த­வு­டன் அவர்­க­ளது வேலை­களை 18 மணி நேரத்­திற்­குள் திட்­ட­மிட்­டுக்­கொண்­டார்­கள். இத­னால் அவர்­க­ளுக்கு அலைச்­ச­லா­க­வும் களைப்­பா­க­வும் இருப்­ப­தாக என்­னி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்." என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் மூன்று ஆண்டு களாக உண­வுத் துறை­யி­லி­ருக்­கும் ந. தாமோ­த­ரன், 23, கொவிட்-19 தொற்று கால­கட்­டத்­தி­லி­ருந்து மலே­சி­யா­வுக்­குச் சென்று வரு­வது சிர­ம­மாக உள்­ளது என்று பகிர்ந்­து­கொண்­டார்.

அவர் பணத்தை மிச்­சப்­ப­டுத்த மலே­சி­யா­விற்­குப் பய­ணம் செய்­வ­தையே குறைத்­துக்­கொண்­ட­தா­க­வும் தேவை ஏற்­பட்­டால் பேருந்­தில் மட்­டுமே பய­ணம் செய்­வார்­கள் என்று தாமோ­த­ரன்­கூ­றி­னார்.

"மலே­சி­யா­வி­லும் விலை­வா­சி­அ­தி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கிறது. அடிக்­கடி பய­ணம் செய்­தால் கட்­டுப்­படி ஆகாது" என்­றார் அவர்.

புதிய விதி­மு­றை­யால் சிங்­கப்­பூ­ரில் விற்­கப்­படும் மோட்­டார் வாகங்­க­ளின் எண்­ணிக்கை 30% அதி­க­ரித்­தி­ருக்­கிறது என்று கூறப்­பட்­டுள்­ளது. ஆனால் எல்­லா­ருக்­கும் அத்­த­கைய வாய்ப்பு கிடைக்­காது.

"சிங்­கப்­பூ­ரில் வாக­னம் வாங்க முயன்­றா­லும், விலை அதி­க­மாக உள்­ளது. எங்­க­ளது அன்­றாட சம்­ப­ளத்­தில் இங்கு வாக­னம் வாங்க முடி­யாது," என்று கூறி­னார் நரேன்­ராஜ்.

வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள் வெளி­நாட்டு வாக­னங்­களை சிங்­கப்­பூ­ரில் நிரந்­த­ர­மாக வைத்­துக்­கொள்ள முடி­யாது என்ற விதி­மு­றையை முதன்­மு­றை­யாக மீறு­வோ­ருக்கு $1,000 வரை அப­ரா­த­மும், மூன்று மாதங்­கள் வரை சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்­கப்­படும்.

அடுத்­த­டுத்த குற்­றங்­க­ளுக்கு $2,000 வரை அப­ரா­தம் அல்­லது ஆறு மாதங்­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!