ஒரே வீட்டில் 50 பூனைகள்: துர்நாற்றம் தாங்கமுடியாமல் தவித்த அண்டைவீட்டார்

ஒரே வீட்டில் 50 பூனைகள்: துர்நாற்றம் தாங்கமுடியாமல் தவித்த அண்டைவீட்டார்

1 mins read
57787198-5ca3-4d27-b290-5225666acdc4
படம்: சாவ்பாவ் நாளிதழ் -

ஈசூனில் உள்ள ஒரு புளோக்கில் வசிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் சன்னல்களை மூடியே வைத்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் வசிக்கும் மாடியில் உள்ள ஒருவர் தனது வீட்டில் 50 பூனைகளை வளர்த்து வருகிறார்.

புளோக் 365 ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள நான்காவது மடியில் வசிப்பவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக துர்நாற்றம் தாங்கமுடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்த புளோக்கில் பூனைகளின் சிறுநீர், மலம் துர்நாற்றம் 2007லிருந்து இருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். சில சமயங்களில் பூனைகள் தனது வீட்டுக்குள் நுழைந்திருப்பதாகவும் மற்றொருவர் சொன்னார்.

பலமுறை நகர மன்றத்திடம் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறினர்.

தனது வீட்டில் 50க்கும் மேற்பட்ட பூனைகள் இருப்பதாக அவற்றை வளர்க்கும் ஹஸ்மாவத்தி கூறினார். வரவேற்பு அறையில் உள்ள கூண்டுகளில் பூனைகள் வைக்கப்பட்டுள்ளன.

பூனைகளை மற்ற இடத்துக்கு மாற்றுவது குறித்து பூனை வளர்ப்பவருக்கு பூனை நலச் சங்கம் உதவிவருவதாக நம்பப்படுகிறது.