மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபர்

மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபர்

1 mins read
4e404230-8a29-4935-ba3d-497580c055fc
-

சொந்த மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 52 வயது ஆடவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகள் நான்கு வயதாக இருந்தபோதும், தன்னுடைய விவாகாரத்துக்கு பிறகும் குற்றவாளி அவரை பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தந்தையின் பொறுப்பில் இருந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2007ல் பாதிக்கப்பட்டவர் சுமார் நான்கு வயது இருந்தபோது, குற்றவாளி அவரை முதல்முறையாக பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டது. சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண் கிட்டத்தட்ட பத்து வயது அடைந்தபோது, குற்றவாளி அவரை மீண்டும் தாக்கினார்.

தனக்கு நடந்ததை தமது தாயிடமோ மற்றவர்களிடமோ சொல்ல பாதிக்கப்பட்டவர் அஞ்சினார். இறுதியாக, 2020ல் இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தார்.

தண்டனை அளிக்கும்போது, பாலியல் பலாத்காரம், சிறாருக்கு பாலியல் வன்முறை உட்பட நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.