பெட்ரோல் விலையை $3க்கு கீழே குறைத்த எஸ்ஸோ

பெட்ரோல் விலையை $3க்கு கீழே குறைத்த எஸ்ஸோ

1 mins read
499c059f-2066-42cd-9284-190e678e3134
-

எஸ்ஸோ நிறு­வ­னம் பெட்­ரோல் விலையை மூன்று வெள்­ளிக்­கும் கீழே குறைத்­துள்­ளது. இவ்­வாறு செய்த முதல் பெட்­ரோல் நிறு­வ­னம் எஸ்ஸோ ஆகும். எஸ்ஸோ நேற்று மாலை 4 மணி அள­வில் விலை­யைக் குறைத்­த­தாக ஃபியுல் காக்கி இணை­யத்­த­ளம் கூறி­யது.

பெட்­ரோல் விலை­யைக் கண்­கா­ணிக்க சிங்­கப்­பூர் வாடிக்­கை­யா­ளர் சங்­கம் உரு­வாக்­கி­யுள்ள இணையத்­த­ளம் அது­வா­கும்.

92 ஆக்­டேன் ரக பெட்­ரோல் ஒரு லிட்­ட­ருக்கு $2.96ஆகக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இது கடந்த வார விலை­யை­விட 14 காசு குறைவு. டீசல் விலை ஒரு லிட்­ட­ருக்கு $2.97ஆக உள்­ளது. இது கடந்த வார விலை­யை­விட 4 காசு குறைவு.

95 ஆக்­டேன் ரக பெட்­ரோலை லிட்­ட­ருக்கு $3.01க்கு எஸ்ஸோ விற்­கிறது. 98 ஆக்­டேன் ரக பெட்­ரோ­லின் விலை $3.48 ஆகக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இவை இரண்­டின் விலை­யும் கடந்த வாரம் இருந்­த­தை­விட 14 காசு குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் மாதத்­துக்­குப் பின்­னர் கச்சா எண்­ணெய்­யின் விலை பீப்­பாய்க்கு 100 அமெ­ரிக்க டால­ருக்­கும் கீழே குறைந்­ததை அடுத்து பெட்­ரோல், டீசல் விலையை எஸ்ஸோ குறைத்­துள்­ளது.

வரும் நாள்­களில் மற்ற எண்­ணெய் நிறு­வ­னங்­களும் பெட்­ரோல், டீசல் விலை­யைக் குறைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.