தொடக்கநிலை ஒன்று பதிவு: 2ஏ கட்டத்தில் 33 பள்ளிகளில் அதிகமான விண்ணப்பங்கள்

தொடக்கநிலை ஒன்று பதிவு: 2ஏ கட்டத்தில் 33 பள்ளிகளில் அதிகமான விண்ணப்பங்கள்

1 mins read
214a3381-81e1-4f14-9b84-9154fae7676a
-

இந்த ஆண்டு தொடக்­க­நிலை ஒன்­றில் நுழை­வுக்­காக 28 பள்­ளி­களில் குலுக்­கல் நடை­பெ­ற­வுள்­ளது. இருக்­கும் இடங்­க­ளை­விட அதிக முன்­ப­தி­வு­க­ளைப் பெற்ற தொடக்­கப்­பள்­ளி­க­ளின் எண்­ணிக்கை இரட்­டிப்­பா­னதை அடுத்து, குலுக்­கல் இடம்­பெ­றும்.

தொடக்­க­நிலை ஒன்­றுக்­கான பதி­வின் 2ஏ கட்­டத்­தில் 33 பள்­ளி­களில் இருக்­கும் இடங்­க­ளை­விட அதிக முன்­ப­தி­வு­கள் பெறப்­பட்­டன. கல்வி அமைச்சு நேற்­று­மு­ன்தினம் இதைத் தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரில் மொத்­தம் 181 தொடக்­கப்­பள்­ளி­கள் இருக்­கின்­றன. தொடக்­க­நிலை ஒன்­றுக்­கான பதி­வின் 2ஏ கட்­டம் இந்த ஆண்டு மாற்றி அமைக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு பழைய முறைப்­ப­டி­யி­லான 2ஏ (2) கட்­டத்­தில் 17 பள்­ளி­களில், இருந்த இடங்­க­ளை­விட அதிக முன்­ப­திவு பெறப்­பட்­டன.

பெய் ஹுவா பிரெஸ்­பி­டே­ரி­யன் பள்ளி, கொங்­ஷாங் தொடக்­கப்­பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் அதிக பதி­வு­க­ளைப் பெற்றன.