செய்திக்கொத்து

தங்கையின் தோழியை பாலியல்

துன்புறுத்தல் செய்த குற்றம் நிரூபணம்

தோழியின் வீட்டில் நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் அங்கேயே தங்கிவிட்ட 19 வயது பெண்ணை, அந்தத் தோழியின் அண்ணனான 26 வயது தொழில்முனைவர் நோர்வன் டான் இன் ஜியெ மானபங்கம் செய்ததுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் இருந்தார். துன்புறுத்தப்பட்ட பெண்ணின் தோழி, அதாவது டானின் தங்கை பொய் சாட்சியம் அளித்துத் தன் அண்ணனைக் காப்பாற்ற முயன்றுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், டான் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் நேற்று நிரூபணமாகின. அடுத்த மாதம் டானுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்;

ஆடவருக்கு 13 ஆண்டுச் சிறை

மகள் வெறும் நான்கு, ஐந்து வயதாக இருந்தபோது அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆடவர், ஆண்டுகள் பல கடந்த பிறகு மறுபடியும் அதே மகளை பாலியல் ரீதியாக வதைத்தார். நேற்று ஆடவருக்கு 13 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தன் தாயார் எப்போதும் தன்னைத் திட்டுவதாலும் அடிப்பதாலும் தன் தந்தையையே முக்கியப் பராமரிப்பாளராகக் கருதினார். துன்புறுத்தலைப் பற்றி 19 வயதுடைய அந்தச் சிறுமி தன் காதலரிடம் கூறியபோது உடனே காவலர்களிடம் இதுகுறித்து புகார் அளிக்குமாறு அந்தக் காதலர் அறிவுறுத்தினார்.

புக்கிட் மேரா தாக்குதல்; ஆடவர்

மீது குற்றம் சாட்டப்பட்டது

புக்கிட் மேரா வட்டாரத்தில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் மற்றொருவரைக் கத்தியைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. நபில் எர்ஃபான் கமில், 28, கத்தி ஒன்றைக் கொண்டு திரு முகம்மது ஸுல்ஃபிகார் என்பவரை கை, கால், கழுத்துப் பகுதிகளில் வெட்டியதாக நேற்று நபில் மீது குற்றம் சாட்டப்பட்டது. மனநலக் கழகத்தில் நபில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மீண்டும் இம்மாதம் 29ஆம் தேதியன்று நபில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

2 வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழை

அடுத்த இரு வாரங்களாக இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. அதனால், குடைகளை மறந்துவிடாமல் வெளியே எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களில் வெப்பம் தலைகாட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!