அதிக சிக்கல்மிக்கதாக உருவெடுத்துவரும் வர்த்தகச் சூழலைக் கையாளும் திறன்களை சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைவர்கள் பெற உதவும் வகையில் புதிய கட்டமைப்புத் திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் தலைவர்கள் கட்மைப்பு (எஸ்ஜிஎல்என்) என்பதன் முக்கிய நோக்கமே சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்வதே.
தங்களின் வாழ்க்கைத்தொழிலின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அனைவரின் அனுபவங்களையும் பயன்படுத்திக்கொள்ளவும் கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யவும் இந்தத் திட்டம் உதவும்.
கட்டமைப்பின்கீழ் எஸ்ஜிஎல்என் வழிகாட்டுதல் திட்டம் ஒன்றும் அடங்கும். இதில் பங்கேற்போருடன் நன்கு நிறுவப்பட்ட நிறுவனத் தலைவர்கள் இணைக்கப்படுவர். தற்போது இத்திட்டத்தின்கீழ் 21 சிங்கப்பூரர்களும் மூன்று வெளிநாட்டவரும் வழிகாட்டிகளாக உள்ளனர்.
சக ஊழியர்கள் வழிகாட்டிகளாக இருப்பதுடன் அவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்கலாம் என்று நிகழ்வில் கலந்துகொண்ட வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் குறிப்பிட்டார்.

