புக்கோம் தீவில் 'ஷெல்' நிறுவனத்தின் எண்ணெய்யை ஒருவர் கையாடல் செய்ததை அறிந்ததுடன் அது வெளியில் தெரியாமல் இருப்பதற்குக் கையூட்டு பெற்றுக்கொண்ட 38 வயது நில ஆய்வாளர் எர்வின் சுஹார்டி ஜமாலுதீன் என்பவருக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எண்ணெய் திருட்டில் எர்வினின் உதவியுடன் கிட்டத்தட்ட 1.2 மி. அமெரிக்க டாலர் மதிப்பிலான 'ஷெல்' எண்ணெய் கையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

