நாயை துன்புறுத்திய சம்பவம் குறித்து விசாரணை

நாய் ஒன்று துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தைக் காட்­டும் காணொளி, சமூக ஊட­கங்­களில் பர­வ­லாக வலம்­வந்­ததை அடுத்து நாய்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கும் 'K9 Connection' நிலை­யம் மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நாய்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் இட­மா­க­வும் இயங்­கி­வந்த அந்த நிலை­யம், சான்­ற­ளிக்­கப்­பட்ட நாய்­கள் பயிற்­று­நர்ப் பட்­டி­ய­லி­லி­ருந்து மார்ச் 25 முதல் நீக்­கப்­பட்­டு­விட்­ட­தாக விலங்­கு­நல மருத்­து­வச் சேவை தெரி­வித்­தது.

துன்­பு­றுத்­த­லைக் காட்­டும் அந்த இரண்டு நிமி­டக் காணொ­ளி­யில் ஒரு நாயை ஆட­வர் ஒரு­வர் உலோக உண­வுக் கிண்­ணம் கொண்டு அடிப்­ப­தாக உள்­ளது.

நாய் அதன் இருப்­பி­டத்­தின் ஓர் ஓரத்­திற்­குப் பின்­வாங்­கு­வ­தை­யும் பயத்­தில் அதன் வால் அத­னு­டைய பின்­னங்­கால்­க­ளுக்கு இடையே செல்­வ­தை­யும் காணொ­ளி­யில் பார்க்க முடி­கிறது.

"நர­கத்­திற்கு உன்னை வர­வேற்­கி­றேன் நண்பா. நான்கு வார நரக வேத­னையை அனு­ப­விக்­கப் போகி­றாய். இன்­றி­ரவு உன்­னி­ட­மி­ருந்து சத்­தம் ஏதும் வந்­தால், உன்னை என்ன செய்­கி­றேன் பார்," என்று அந்த ஆட­வர் கூறு­வ­தா­கக் காணொ­ளி­யில் உள்­ளது.

இந்­நி­லை­யில், நன்கு ஆராய்ந்து தங்­க­ளின் செல்­லப்­பி­ரா­ணிக்­குப் பொருத்­த­மான காப்­பா­ளரை உரி­மை­யா­ளர்­கள் தேர்வு செய்­யு­மாறு விலங்­கு­வ­தைத் தடுப்­புச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான ஆர்த்தி சங்­கர் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!