சிங்கப்பூரில் எல்லா வயது மக்களின் மனநலனைப் பாதுகாப்பதற்காக இன்று ஒரு புதிய செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 'எஸ்ஜி மனநலக் கட்டமைப்பு' என்ற அந்தத் திட்டத்தின் முக்கியமான ஓர் அங்கமாக சமூக நல்வாழ்வுக் குழுக்கள் அமையும். பல குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் அந்தக் குழுக்களில் சமூகத் தொண்டூழியர்களும் அடித்தள தலைவர்களும் சமூக சேவை பங்காளிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவார்கள்.
அவர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடும் மக்களுக்கு ஆலோசனை தந்து உதவுவார்கள். அதோடு, நல்வாழ்வுச் செயல்திட்டங்களையும் நிர்வகித்து நடத்துவார்கள்.
அந்தப் புதிய கட்டமைப்பில் சமூக சேவை அமைப்புகள், மனநல ஆலோசனை அமைப்புகள் போன்ற பங்காளித்துவ அமைப்புகள் இருக்கும். கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் அதற்குத் தலைமை வகிப்பார்.
விரிவான செய்திகளுக்கு நாளைய (ஜூலை 17) தமிழ் முரசு அச்சுப்பிரதியைக் காண்க

