சமய நல்லிணக்கத் தொண்டை அங்கீகரித்து பாராட்ட விருது 90வது ஆண்டு விழாவில் ஜாமியா சிங்கப்பூர் தொடங்கியது

சமய நல்லிணக்கத் தொண்டை அங்கீகரித்து பாராட்ட விருது 90வது ஆண்டு விழாவில் ஜாமியா சிங்கப்பூர் தொடங்கியது

3 mins read
b0da79e2-f985-40f0-9be2-504c38ba75cb
-

சிங்­கப்­பூ­ரில் அனைத்து சமய நல்­லி­ணக்­கத்­திற்கு குறிப்­பி­டத்­தக்க தொண்­டாற்­றும் தனிப்­பட்­ட­வர்­க­ளை­யும் அமைப்­பு­க­ளை­யும் அங்­கீ­கரித்து பாராட்­டு­வ­தற்­காக ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்பு புதிய விருது ஒன்றைத் தொடங்கி இருக்­கிறது.

'சம­யங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்க முன்­மா­திரி விருது' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் புதிய விருது, மேலும் பல சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­வந்து அமை­திக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கும் தொடர்ந்து பாடு­பட ஊக்­க­மூட்­டும்.

ஜாமியா சிங்­கப்­பூ­ரின் 90வது ஆண்­டு­விழா நிகழ்ச்­சி­யில் நேற்று அந்த விருது தொடங்கப்­பட்­டது.

அதைத் தொடங்கிவைத்து பேசிய மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், இப்­போ­தைய கால­கட்­டத்­திற்கு இத்­த­கைய விருது போன்ற முயற்­சி­கள் மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­வை­ என்று குறிப்­பிட்­டார்.

உல­க­ள­வில் தேசி­ய­வாத போக்கு­கள், இன­வாத அர­சி­யல், சமய சகிப்­பின்மை போன்ற போக்­கு­கள் தலை­தூக்கி வரு­வதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

வெவ்­வே­றான சம­யங்­க­ளுக்கு மதிப்பு அளிக்­கின்ற, பன்­ம­யத்தைத் தழு­விக்­கொள்­கின்ற நம்­மு­டைய பல சமய, பல இன சமூ­கத்­தைப் போற்றி கொண்­டா­டு­கின்ற ஒரு சமூ­கத்தைத் தொடர்ந்து பேணி வளர்த்துவர வேண்­டும் என்று திரு டியோ வலி­யு­றுத்­தி­னார்.

ஒரே மக்­க­ளாக நம்மை ஐக்­கி­யப்­ப­டுத்­தும் பொது­வான நன்­னெறி­களை இதன்­மூ­லம் நாம் பலப்­படுத்த முடி­யும் என்­றார் அவர்.

இது நிச்­ச­ய­மில்­லாத இப்போதைய உலகை எதிர்­கொள்ள நமக்குப் பலத்தைக் கொடுக்­கிறது என்­றும் திரு டியோ குறிப்­பிட்­டார்.

ஜாமியா சிங்கப்பூர் போன்ற சமூக அமைப்­பு­கள் ஆற்­றும் முக்கிய பணி­களை அவர் பாராட்­டி­னார்.

தேசிய பாது­காப்பு ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ, நேற்­றைய நிகழ்ச்­சி­யில் 'ஜாமியா சிங்­கப்­பூ­ரின் 90ஆம் ஆண்டு விழா', 'சமய நல்­லி­ணக்­கம்: ஜாமி­யா­வின் பங்­க­ளிப்­பு­கள்' என்ற இரண்டு நூல்­க­ளின் சிறப்புப் பதிப்­பு­களை வெளி­யிட்­டார்.

சமூ­கத்­தின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தில் அர­சு எடுக்­கும் முயற்சி­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் சமூக அமைப்­பு­கள் முக்­கிய பணி­யாற்­று­வ­தாக திரு டியோ குறிப்­பிட்­டார். நெருக்­கடி காலத்­தின்­போதும் சமூக அமைப்­பு­களும் சமூக சேவை அமைப்­பு­களும் முக்­கிய பணி­யாற்று­கின்­றன. இதன்­மூ­லம் மீள்­தி­றன் பலப்­படு­கிறது. சமூகத் திற்கு ஆதரவு கிடைக்­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்குப் பொது­வான வாய்ப்பு வச­தி­களை விரிவு­படுத்தி வெவ்­வே­றான குழு­வி­னரை ஒருங்­கே ­கொ­ணர்­வ­தி­லும் சமூக அமைப்­பு­கள் முக்­கிய பங்­காற்­று­வதாக திரு டியோ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்­தைப் பலப்­ப­டுத்­து­வதில் ஜாமியா சிங்­கப்­பூர் மிகப் பெரும் பங்­காற்றி வந்­தி­ருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்பைத் தோற்­று­வித்த மௌலானா அப்­துல் அலிம் சித்­திக், 1949ல் அனைத்து சமய அமைப்பை தோற்­றுவித்­தார் என்­ப­தை­யும் திரு டியோ சுட்­டிக்­காட்­டி­னார். ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் 90ஆம் ஆண்டு கொண்­டாட்ட விருந்து நேற்று மரினா பே சாண்ட்­சில் நடந்­தது.

அதில் தொடக்க உரை­யாற்­றிய ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் தலை­வர் முகம்­மது ஹஸ்பி அபு­பக்­கர், கடந்த 90 ஆண்­டு­க­ளாக ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் வளர்ச்சி பற்­றி­யும் அதன் இப்­போதைய நட­வ­டிக்­கை­கள், சேவை­கள் பற்­றி­யும் எடுத்­துக் கூறி­னார்.

பிர­த­மர் லீ சியன் லூங் காணொளி வாயி­லாக நேற்­றைய நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றி­னார்.

சமூ­கத்­திற்கு, குறிப்­பாக உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்கு ஆதரவு அளிக்க அர­சு எடுக்­கும் முயற்சி­களுக்கு ஜாமி­யா­வின் பணி­கள் உறு­து­ணை­யாக உள்ளதாக தெரி­வித்த பிர­த­மர், ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்பு ஆற்றிவரும் முக்­கியமான தொண்டு­க­ளுக்கு அரசு­தொடர்ந்து ஆத­ரவளிக்­கும் என்றார்.

கூடுதல் செய்தி:

ஹர்ஷிதா பாலாஜி