ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் 90ஆம் ஆண்டு நிறைவையொட்டி, 'ஜாமியா சிங்கப்பூரின் 90ஆம் ஆண்டு நிறைவு', 'சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்: ஜாமியாவின் பங்களிப்பு' ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
'ஜாமியா சிங்கப்பூரின் 90ஆம் ஆண்டு நிறைவு' நூலில், ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு நிறுவப்பட்டதன் வரலாறு, அமைப்பு ஆற்றிய சேவைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சிக்கு வருகையளித்த உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான கா. சண்முகம், 'சமய நல்லிணக்கம்: ஜாமியாவின் பங்களிப்புகள்' புத்தகத்தை சிங்கப்பூரில் செயல்படும் ஒன்பது சமய அமைப்புகளுக்கு வழங்கினார்.

