படையினரை பிரதமர் சந்தித்தார்

படையினரை பிரதமர் சந்தித்தார்

1 mins read
2a57ae01-3642-4f2b-ac64-643d08ae020f
புருணை தம்புரோங்கில் முழு நேர தேசிய சேவையாளர்களையும் ராணுவ வீரர்களையும் சந்தித்ததாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். படம்: லீ சியன் லூங்/ ஃபேஸ்புக் -

பிர­த­மர் லீ சியன் லூங் புரு­ணைக்கு மூன்று நாள் பய­ணம் மேற்­கொண் டார். அவர், தம்­பு­ரோங் என்ற இடத்­தில் வெள்­ளிக்­கி­ழமை பயிற்­சி­யில் ஈடு­பட்டிருந்த சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை வீரர்­க­ளைச் சந்­தித்­தார்.

பிர­த­ம­ரு­டன் ராணு­வத் தலை­வர் டேவிட் நியோ­வும் உடன் இருந்­த­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

புரு­ணை­யில் இடம்­பெ­றும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யி­ன­ரின் பயிற்சி, ஆகஸ்ட்­டில் இருந்து கட்­டம் கட்­ட­மாக அதி­க­மாகி கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையை எட்­டும் என்றது அமைச்சு.

புரு­ணை­யில் சிஆ படை­கள் நடத்­தும் காட்­டுப் புற பயிற்சி ஒரு­பு­றம் இருக்க, அந்­தப் படை­களும் புருணை அரசு ஆயு­தப் படை­களும் இரு தரப்பு பயிற்­சி­களை அடிக்­கடி நடத்­து­கின்­றன.

நிபு­ணத்­துவ பரஸ்பர பரி­மாற்­றங்­களும், பரஸ்­பர பயிற்சி வகுப்பு­களும் இடம்­பெ­று­கின்­றன என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

இந்­தப் பரஸ்­பர நட­வ­டிக்­கை­கள் இரு நாட்டு ஆயு­தப் படை­களின் நிபு­ணத்­து­வத்தை மேம்­ப­டுத்தி உள்ளன. அவற்றுக்கு இடை­யில் உற­வு­களைப் பலப்­ப­டுத்தி உள்ளன.

தம்­பு­ரோங்­கில் தான் முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளை­யும் முழு­நேர வீரர்­க­ளை­யும் சந்­தித்­த­தாக பிர­த­மர் லீ ஃபேஸ்புக்­கில் கூறினார்.

திரு லீ, ஜூலை 14 முதல் 16 வரை புரு­ணைக்கு பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ருக்கு நேற்று புருணை சுல்­தான் அர­ச­ம­ரி­யாதை அளித்து சிறப்­பித்தார்.