சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவு, கள்ளப்பணம் விவகாரம் தொடர்பில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை எடுத்த நடவடிக்கையில் 11 ஆடவர்களும் ஒரு மாதரும் கைது செய்யப்பட்டனர்.
17 வயது முதல் 30 வயது வரை உள்ள அந்த 12 பேரும் $2 மில்லியனுக்கும் அதிக தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
காவல்துறை புலன்விசாரணையில் 17 வயது முதல் 67 வரை வயதுள்ள இதர 11 ஆடவர்களும் மூன்று மாதர்களும் உதவி வருகிறார்கள் என்று காவல் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. புலன் விசாரணை தொடர்கிறது.

