ரத்த தானம் வழங்க கிட்டத்தட்ட 3,000 பேர் சென்ற வாரம் முன்வந்தனர். இது ஒரு வாரத்தில் நன்கொடை வழங்கப்படும் சராசரிஅளவை காட்டிலும் 43 விழுக்காடு அதிகம்.
ஏ பிளஸ், ஓ பிளஸ் ரத்த இருப்பு குறைந்துவிட்டதைத் தொடர்ந்து, இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்த நன்கொடை தரும்படி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
குறைந்தது 12 நாள்களுக்கு தேவையான ரத்தம் இருப்பில் இருப்பது சிறந்தது. இதற்குக் கீழ் ரத்தத்தின் அளவு குறைந்தால் சில அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படலாம்.
கொவிட்-19 கிருமித் தொற்று காரணத்தினால், கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

