காற்பந்து ஆட்டத்தின்போது திடலில் அத்துமீறி நுழைந்தவர்கள்

காற்பந்து ஆட்டத்தின்போது திடலில் அத்துமீறி நுழைந்தவர்கள்

1 mins read
22f3473c-d57d-4346-ad88-44407ceba8ed
படம்: ஹஃபிஸ்/ டிக்டாக் -

தேசிய விளையாட்டரங்கில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின்போது, வேலியைத் தாண்டி திடலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக இருவரை சிங்கப்பூர் காவல் துறை விசாரித்துவருகிறது.

லிவர்பூல் அணியும் கிறிஸ்டல் பேலஸ் குழுவும் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற லிவர்பூல் குழு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் திடலை சுற்றி வரும்போது, இரு நபர்கள் திடலை சுற்றி போடப்பட்டிருந்த வேலியை தாண்டி திடலுக்குள் ஓடியதாகக் கூறப்பட்டது.

ஒரு நபர் லிவர்பூல் ஆட்டக்காரர்களைத் தாண்டி திடலை சுற்றி ஓடும்போது பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிபட்டார். மற்றொருவர் வேலியை தாண்டும்போது, லிவர்பூல் அணியின் முன் தடுக்கிவிழுந்தார். அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்தனர்.

இருவரும் லிவர்பூல் சட்டையை அணிந்திருந்தனர்.

17 மற்றும் 41 வயதான ஆடவர்கள் காவல் துறை விசாரணையில் உதவி வருவதாகக் கூறப்பட்டது.

அத்துமறி நுழையும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது $1,000 அபராதம் விதிக்கப்படலாம்.