பழைய எம்ஆர்டி ரயில் பாகங்களுக்குப் புத்துயிர்

பழைய எம்ஆர்டி ரயில் பாகங்களுக்குப் புத்துயிர்

2 mins read
9da5a56b-c9f6-4fed-86b9-43dbfd230917
(இடமிருந்து) திரு லிம் பியாவ் சுவான், மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, திரு அலெக்ஸ் யாம், திருவாட்டி ஹனி சோ, டாக்டர் வான் ரிஸால் ஆகியோர் எம்ஆர்டி இருக்கை ஒன்றில் அமர்ந்துள்ளனர். பூச்சட்டியாகப் பயன்படுத்தப்படும் பழைய ரயில் பாகம் ஒன்றை இவர்கள் காட்டுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பழைய எம்­ஆர்டி ரயில் பாகங்­களில் இருந்து பெறப்­பட்ட புதிய இருக்­கை­கள், பாது­காப்பு கைப்­பி­டி­கள், பூச்­சட்­டி­கள் போன்­றவை அக்­கம்­பக்க பேட்­டை­களில் பொருத்­தப்­பட்டு இருப்­ப­தைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம்.

குறைந்­தது 1,500 எம்­ஆர்டி இருக்­கை­களை வீட­மைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கு­களின் வெற்­றுத் தளங்­க­ளி­லும் இதர சமூக இடங்­களிலும் பொருத்த இத்­திட்­டம் இலக்கு கொண்­டு உள்ளது. மேலும், 1,400 ரயில் கைப்­பிடி­கள், நட­மாடு­வதில் சிர­மத்தை எதிர்­நோக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்­காக வீவக பேட்­டை­களில் பொருத்­தப்­பட உள்­ளன.

ரயில்­களில் காணப்­படும் ஏறக்­கு­றைய 900 'இண்­டர்­காம்' சட்­டங்­கள், 'எல்­இடி' விளக்கு மூடி­களை சமூ­கத்தின் பசுமை இடங்­களில் பயன்­படுத்த இவை பூச்­சட்­டி­க­ளாக மாற்­றப்­படும்.

மக்­கள் செயல் கட்­சி­யின் (மசெக) 15 நகர மன்­றங்­களும் இந்த மறு­பயனீட்டு முயற்­சியை முன்னெடுத்­துள்­ளன.

2025க்குள், பழைய ரயில்­களில் இருந்து பெறப்­பட்ட 14,400 கிலோ­கி­ராம் எடை­யு­டைய பிளாஸ்­டிக் பொருள்­கள், உலோ­கங்­கள், மறு­சு­ழற்சி செய்­யப்­பட முடி­யாத பொருள்­கள் உள்­ளிட்­டவை குப்பை நிரப்­பும் நிலத்­தில் குவிக்கப்­ப­டு­வதற்­குப் பதி­லாக குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் மறு­ப­யன்­பாட்­டிற்கு விடப்­படும் என்று மசெக நேற்று கூறி­யது.

இத்­திட்­டம், நகர மன்­றங்­கள் ஏறக்­கு­றைய $275,000 பணத்தை மிச்­சப்­ப­டுத்த உத­வும் என்­றும் மசெக சொன்­னது. உட்­லண்ட்ஸ் டிரைவ் 50ல் நேற்று நடை­பெற்ற கண்­காட்சியுடன் இத்­திட்­டம் அதிகா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கப்­பட்டது.

"இத்­திட்­டத்­தின் மூலம் செமாக்­காவ் குப்பைக் கிடங்கில் ஏறக்­குறைய 14,400 கிலோ­கி­ராம் கழிவு­கள் குவிக்­கப்­ப­டு­வ­தைக் குறைக்க நாங்­கள் இலக்கு கொண்டுள்­ளோம். செமாக்­காவ் நிலத்­தின் செயல்­பாட்டுக் காலத்தை நீட்­டிக்க நாங்கள் ஆற்­றும் பங்கு இது," என்று திட்­டத்­தின் துணைத் தலைவர் ஹனி சோ குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் ஒரே குப்பை நிரப்பும் நில­மான செமாக்­காவ் தீவு, 2035க்குள் முழு­மை­யாக நிரம்­பி­விடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் அடை­யா­ளத்­தின் முக்­கிய தூணாக எம்­ஆர்டி ரயில்­கள் விளங்­கு­வ­தைச் சுட்­டிய திரு­வாட்டி சோ, ரயில் பாகங்­களில் இருந்து பெறப்­பட்ட பொருள்­க­ளைப் பார்க்­கும்­போது, குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்களுக்கு மிகவும் பரிச்­ச­ய­மான ஓர் உணர்­வைப் பெறு­வர் என்­றார்.