ரத்த தானம் வழங்க 3,300க்கும் மேற்பட்டோர் முன்வந்தனர்

ரத்த தானம் வழங்க 3,300க்கும் மேற்பட்டோர் முன்வந்தனர்

2 mins read
3bfffd57-0b1c-4df8-b450-494766bf28b8
சுகாதார அறிவியல் ஆணையத்தில் உள்ள ரத்த வங்கியில் நேற்று முன்தினம் ரத்த தானம் வழங்கிய சிலர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரத்த தானம் வழங்க முன்­வ­ரு­மாறு விடுக்­கப்­பட்டு இருந்த வேண்­டு­கோ­ளுக்கு அமோக வர­வேற்பு கிடைத்­துள்­ளது. சிங்­கப்­பூர் செஞ்­சி­லுவைச் சங்­கத்­தின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்கி, கடந்த வாரம் 3,300க்கும் மேற்­பட்­டோர் ரத்த தானம் வழங்க முன்­வந்­த­னர்.

பொது­வாக ரத்த தானம் வழங்க முன்­வருவோரின் எண்­ணிக்­கை­யை­விட இது 43 விழுக்­காடு அதிகம் என்று செஞ்­சி­லுவைச் சங்கம் தெரி­வித்­தது.

"ரத்த தானம் வழங்க அடுத்த வார­மும் கூடு­த­லா­னோர் முன்­வருவர் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்று சங்­கம் கூறி­யது.

ஊட்­ரம் சாலை­யில் உள்ள சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் ரத்த வங்­கிக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு நேற்று முன்­தி­னம் சென்­றி­ருந்­தது. அப்­போது அந்த ரத்த வங்கியில் கூட்­டம் நிறைந்து காணப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் உள்ள நான்கு ரத்த வங்­கி­களில் இது­வும் ஒன்று.

A+, O+ ரத்த வகை இருப்பு, ஒன்­பது நாள்­க­ளுக்­கும் குறை­வாக இருந்­த­தா­கக் கூறிய செஞ்­சி­லுவை சங்­கம், ரத்த தானம் வழங்க கூடு­தலா­னோர் முன்­வ­ரு­மாறு ஜூலை 8ஆம் தேதி பொது­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தது.

பொது­வாக, குறைந்­தது 12 முதல் 15 நாள் ரத்த இருப்பு தேவைப்­ப­டு­வ­தாக சங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார். ரத்த தானம் வழங்க முன்­வ­ரு­வோர் எண்­ணிக்­கை­யைப் பாதிக்­கும் பல்­வேறு அம்­சங்­களில் தற்­போ­தைய கொவிட்-19 அலை­யும் ஒன்று என்று செஞ்­சி­லு­வைச் சங்­கம் கூறி­யது.

"அவ்­வப்­போது ரத்த தானம் கொடுப்­போர், கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர் அல்­லது கொவிட்-19 தொற்­றி­ய­வர்­களுடன் நெருங்­கிய தொடர்­பில் வந்­த­னர்," என்று சங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­னோர், ரத்த தானம் வழங்­கு­வ­தற்கு முன்பு குறைந்­தது 28 நாள்­கள் காத்­தி­ருக்க வேண்­டும். அவர்­கள் தொற்­றி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்திருப்பதை உறுதிசெய்ய இந்த வழிகாட்டி நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது.