ஒவ்வொரு வீட்டிற்கும் பத்து ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் (ஏஆர்டி) கருவிகளை சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது.
இன்று முதல் சுமார் 1.5 மில்லியன் வீடுகளுக்கு கருவிகளை விநியோகிக்கும் பணி தொடங்கும். சில குடும்பங்கள் கருவிகளை பெற சில வாரங்கள் எடுக்கும் என அமைச்சு கூறியது.
தற்போது நிலவிவரும் கொவிட்-19 அலையிலிருந்து சிங்கப்பூரர்கள் மீண்டுவர இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் குறிப்பிட்டார்.
இக்கருவிகள் மூலம் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். பயனாளர்கள் பஞ்சு உருட்டை (swab) ஒவ்வொரு நாசித் துவாரத்திலும் 10 முறை சுழற்றி, சளி மாதிரியைச் சேகரிக்க வேண்டும்.
ஏஆர்டி கருவிகள் இப்படி அஞ்சல்மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படுவது இது மூன்றாவது முறை.

