ஓசிபிசி மோசடியில் தொடர்பிருந்த சந்தேகத்தின்பேரில் 31 வயது ஆடவர் கைது

ஓசிபிசி மோசடியில் தொடர்பிருந்த சந்தேகத்தின்பேரில் 31 வயது ஆடவர் கைது

1 mins read
ecb9e191-bcd8-423d-89ea-74c7f1044524
-

ஓசி­பிசி வங்­கி­யின் வாடிக்­கை­ யாளர்­க­ளைக் குறி­வைத்து சில­ கா­ல­மாக நடந்­து­வ­ரும் மோச­டி­களில் தொடர்பு வகித்த சந்­தே­கத்­தின்­ பே­ரில் 31 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். காவல்­து­றை­நேற்று இதைத் தெரி­வித்­தது.

கடந்த டிசம்­பர் 26ஆம் தேதி ஓசி­பிசி வங்கி அதி­கா­ரி­கள் போல நடித்து மோசடி செய்­த­வர்­க­ளி­டம் ஏமாந்த நப­ரி­ட­மி­ருந்து புகார் கிடைத்­த­தாக அது கூறி­யது.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் வங்­கிக் கணக்­கில் தாம் அனு­ம­தி ­த­ராத பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. அவற்­றால் ஆட­வர் $100,000க்கு மேல் இழந்­தார். பாதிக்­கப்­பட்­ட­ வரின் பணத்­தில் $18,000க்கு மேல், யுஓபி வங்­கி­யில் இருந்த வர்த்­த­கக் கணக்­குக்கு மாற்­றி­வி­டப்­பட்­ட­தாக முதல் கட்ட விசா­ர­ணை­ கூறியது.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில், உள்­நாட்­டில் தொடங்­கப்­பட்ட நிறு­வ­னத்­துக்­காக சந்­தேக நபர் அந்த யுஓபி வங்­கிக் கணக்­கைத் திறந்­தி­ருந்­தார். அதற்­காக அவர் தமது 'கார்ப்­பாஸ்' விவ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி இருந்­தார். பின்­னர், பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு பெயர் தெரி­யாத மற்­றொரு நப­ரி­டம் தந்­து­விட்­டார்.

அந்த 31 வயது ஆட­வ­ரின் வங்­கிக் கணக்­கி­லி­ருந்து டிசம்­பர் 20 முதல் 27 வரை, $4 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட தொகை பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டது.

குற்­றச்­செ­ய­லால் இன்­னொ­ரு­வர் பலன் பெற உதவ திட்­ட­மிட்­ட­தற்­காக 31 வயது ஆட­வர் மீது நீதி­மன்­றத்­தில் இன்று குற்­றஞ்­சாட்­டப்­படும்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், அவ­ருக்கு பத்­தாண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை, அல்­லது $500,000 வரை­யி­லான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­க­ப்­ப­ட­லாம்.