சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் மேலும் உயரக்கூடும்

சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் மேலும் உயரக்கூடும்

1 mins read
bb53dcaf-a421-4833-b8c6-ba65aaa03d23
-

சிங்­கப்­பூ­ரில் மின்­சா­ரக் கட்­ட­ணங்­கள் மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

ரஷ்­யா­வி­லி­ருந்து ஜெர்­ம­னிக்கு இயற்கை எரி­வா­யு­யைக் கொண்டு செல்­லும் முக்­கிய எரி­வா­யுக் குழா­யின் செயல்­பாடு நிறுத்­தப்­பட்­டுள்­ளது. நார்ட் ஸ்ட்­ரீம் 1 எனும் எரி­வா­யுக் குழாய் பரா­ம­ரிப்­புக்­காக ஜூலை 11 முதல் 21ஆம் தேதி வரை மூடப்­பட்­டுள்­ளது.

ஆனால் அதன் பின்­ன­ரும் ரஷ்ய அதி­பர் புட்­டின் குழா­யைக் கால­ வ­ரை­யறை இன்றி நிறுத்தி வைக்­க­லாம் என்­றும் இத­னால் ஐரோப்­பா­வில் இயற்கை எரி­வாயு பற்­றாக்­குறை அதி­க­ரிக்­க­லாம் என்­றும் அஞ்­சப்­ப­டு­கிறது.

இத­னால் திர­வ இயற்கை எரி­வா­யு­வின் உல­க­ளா­விய விலை ஒரு வார­மாக வேக­மாக உயர்ந்து வரு­கிறது. விலை உயர்வு நீண்­ட ­காலம் நீடிக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இயற்கை எரி­வாயு பற்­றாக்­குறை நீடித்­தால் சிங்­கப்­பூர் அதற்­காக கடு­மை­யா­கப் போட்­டி­யிட வேண்­டி­ருக்­கும். இத­னால் மின்­சா­ரக் கட்­ட­ணங்­கள் அதி­க­மா­கக் கூடும் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறி­னர்.