கண் பார்வையைக் காக்கும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

கண் பார்வையைக் காக்கும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

1 mins read
ca878dd0-d312-4a6f-9e8b-6e0b86371183
'வேபிஸ்மோமைனா' சிகிச்சையை மாதத்திற்கு ஒருமுறை பெற்ற முன்னாள் சிறை அதிகாரியான 61 வயது ஜெய பிரகாஸ், ஆறு மாதங்களில் தனது பார்வையின் பெரும்பகுதியை மீட்டெடுத்தார். 2020ஆம் ஆண்டில் இவருக்கு கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பார்வை மறைந்திருந்தது. படம்: சாவ் பாவ் -

சிங்­கப்­பூர் கண் ஆய்­வுக் கழ­கம், 'ரோச்சே' மருந்­தாக்க நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றின் ஆய்­வா­ளர்­கள் இணைந்து கண் பார்­வை­யைக் காக்க உத­வும் புதிய மருந்­தைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

'வேபிஸ்மோ' எனப்­படும் இந்­தப் புதிய மருந்து பத்­தாண்­டுக் கடின முயற்­சி­யின் பல­னா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

வய­தா­வ­தால் கண் ரத்­தக் குழாய்­களில் ஏற்­படும் கோளாறு, நீரி­ழிவு நோயால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு ஆகி­ய­வற்­றுக்­குச் சிகிச்சை அளிக்க இந்த மருந்து பயன்­படும்.

சிங்­கப்­பூர் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் இதற்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. வயது கார­ண­மாக கண் ரத்­தக் குழாய்­களில் ஏற்­படும் பாதிப்­பால் உல­கெங்­கும் கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் பேர் அவ­தி­யு­று­கின்­ற­னர். 60 வய­துக்கு மேலா­னோ­ரி­டம் கண்­பார்வை இழப்­பிற்கு இது முக்­கி­யக் கார­ண­மாக விளங்­கு­கிறது.

நீரி­ழிவு நோயால் ஏற்­படும் கண்­பார்வை பாதிப்பு உல­க­ள­வில் ஏறக்­கு­றைய 21 மில்­லி­யன் பேரைப் பாதித்­துள்­ளது. இத­னா­லும் பார்­வையை இழக்க நேரி­டும்.

'ரோச்சே' நிறு­வ­னத்­தின் இந்த மருந்தை சிங்­கப்­பூர் கண் ஆய்­வுக் கழக ஆய்­வா­ளர்­கள் நோயா­ளி­க­ளி­டம் சோதித்­த­னர்.

தொடர்ந்து சிங்கப்பூர் கண் ஆய்­வுக் கழ­கத்­து­டன் இணைந்து பணி­யாற்றி சிங்­கப்­பூ­ரில் கண் நோயால் சிரமப்படுவோருக்கு உதவ 'ரோச்சே' நிறு­வ­னம் கடப்­பாடு தெரி­வித்­தது.