'டிபிஎஸ்' வங்கியின் புதிய பசுமைக் கட்டடம்

'டிபிஎஸ்' வங்கியின் புதிய பசுமைக் கட்டடம்

1 mins read
a05d72fe-7d1b-4409-b2e5-492ca61b37c7
-

நியூட்­டன் வட்­டா­ரத்­தில் அமைந்­தி­ருக்­கும் 'டிபி­எஸ்' வங்­கி­யின் முதல் பசு­மைக் கட்­ட­டம் (படம்) நேற்று முதல் அதி­கா­ர­பூர்­வ­மா­கச் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய வங்­கிக் கட்­ட­டம் அமை­வது இதுவே முதல்­முறை.

முப்­ப­தாண்டு பழ­மை­யான இந்த நான்கு மாடிக் கட்­ட­டத்­தின் மேற்­கூ­ரை­யில் ஏறக்­கு­றைய ஆயி­ரம் சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் சூரி­ய­சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

இவற்­றில் இருந்து பெறப்­படும் மின்­சா­ரத்­தில் இயங்­கும் குளிர்­சா­த­னக் கட்­ட­மைப்பு, விளக்­குக் கம்­பங்­கள் உள்­ளிட்­ட­வற்­று­டன் குளிர்ச்­சி­யைத் தரும் வகை­யில் கட்­ட­டத்­தின் வெளிப்­பு­றம் மூங்­கில் கம்­பங்­க­ளால் அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஆங்கிலத்தில் 'நெட் ஸீரோ' என வகைப்படுத்தப்படும் இத்தகைய கட்டடம் தயாரிக்கும் மின்சாரத்தின் அளவே பயன்பாடும் இருக்கும்.