கையூட்டு தர முயன்றவருக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை

கையூட்டு தர முயன்றவருக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை

1 mins read
8f8a4425-96bd-4698-aabb-bed356ba4b85
-

போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­குக் கையூட்டு தர முயன்­ற­வ­ருக்கு நேற்று எட்டு வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சீன நாட்­ட­வ­ரான 38 வயது ஹான் ஷாவ்லு, 2019ஆம் ஆண்டு டிசம்­பர் 3ஆம் தேதி மது அருந்தி­விட்டு வாக­னம் ஓட்­டி­னார்.

தன் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல் விட்­டு­வி­டக் கோரி போக்கு­வ­ரத்­துக் காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அவர் நூறு வெள்ளி தர முற்­பட்­டார்.

இதன் தொடர்­பில் ஹான் மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

விசா­ர­ணை­யில், தாம் லஞ்­சம் தர­வில்லை என்­றும் அப­ரா­தத் தொகை­யைச் செலுத்த முற்­பட்­ட­தா­க­வும் ஹான் கூறி­னார்.

ஐந்து நாள் விசா­ர­ணைக்­குப் பிறகு ஹான் குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

சம்­பவ தினத்­தன்று விசா­ரிக்­கச் சென்ற போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் ஹான் மேண்­ட­ரின் மொழி­யில் பேசி­ய­தால் அவர்­கள் அம்­மொழி தெரிந்த சக அதி­கா­ரி­யின் உத­வியை நாடி­னர்.

ஹான் இரண்டு 50 வெள்ளி நோட்­டு­க­ளைக் காட்டி போதா­விட்­டால் மேலும் தரு­வ­தா­க­வும் தன்னை விட்­டு­வி­டும்­படி­யும் கூறி­ய­தா­கத் தெரி­ய­வந்­தது. அங்கு வந்த மேல­தி­கா­ரிக்­கும் அவர் $100 தர முற்­பட்­டார்.