கத்தியால் குத்திய சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது

கத்தியால் குத்திய சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது

1 mins read
98f97bb3-c6d8-4f98-9781-8a2c257e7e8b
-

அபா­ய­க­ர­மான ஆயு­தத்­தைக் கொண்டு வேண்­டு­மென்றே காயம் ஏற்­ப­டுத்­திய சந்­தே­கத்­தின் பேரில் 21 வயது இளை­யர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இன்று அவர்­மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படலாம்.

நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வுக்­குப் பின் 2.10 மணி­ய­ள­வில் சர்க்­கு­லர் ரோடுக்கு அருகே ஆட­வர் ஒரு­வரை மற்­றோர் ஆட­வர் கத்­தி­ய­தால் தாக்­கி­ய­தா­கச் சொல்­லப்­படும் சம்­ப­வம் குறித்­துத் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறியது.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், முறையே 37 வய­தும் 21 வய­தும் நிரம்­பிய ஆட­வர்­கள் இரு­வர் சண்­டை­யிட்­டது தெரி­ய­வந்­துள்­ளது. இதில் 21 வயது இளை­யர் மற்­ற­வ­ரைக் கத்­தி­யால் தாக்­கி­விட்டு சம்­பவ இடத்தை விட்­டுத் தப்­பிச் சென்­ற­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

தாக்­கப்­பட்­ட­வ­ருக்கு உட­லில் பல காயங்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் கூறின.

குற்­றச்­செ­யல் நடந்த 12 மணி நேரத்­துக்­குள் சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­ட­மி­ருந்த கத்தி பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

கைது நட­வ­டிக்­கை­யின்­போது, குற்­றச் செய­லில் ஈடு­பட்­ட­வ­ருக்கு அடைக்­க­லம் தந்­த­தா­கக் கூறப்­படும் 19 வயது இளை­ய­ரும் கைது செய்­யப்­பட்­டார்.

இரு­வ­ரும் இன்று நீதி­மன்­றத்­துக்­குக் கொண்­டு­செல்­லப்­ப­டு­வர்.