கிருமித் தொற்றால் 4 வயது சிறுமி மரணம்

கிருமித் தொற்றால் 4 வயது சிறுமி மரணம்

1 mins read
96445971-7939-4800-afb1-259d8e222a4f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சிங்கப்பூரில் நான்கு வயது சிறுமி ஒருவர் கொவிட்-19 கிருமித் தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமித் தொற்றால் 12 வயதுக்குக் கீழ் உள்ளவர் மாண்டிருப்பது இது இரண்டாவது முறை.

சிறுமியின் மரணத்துக்கு நிமோனியா காய்ச்சல் காரணம் என அமைச்சு கூறியது. சிறுமிக்கு மற்ற எந்தவொரு மருத்துவ பிரச்சினை இல்லையென்றும் குறிப்பிடப்பட்டது.

ஜூலை 15 அன்று சிறுமிக்கு காய்ச்சலும், மூச்சு பிரச்சினையும் ஏற்பட்டது. ஏஆர்டி பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது. மருந்து உட்கொண்டும், அவரது உடல்நிலை மேம்படவில்லை. அன்று இரவு சிறுமி மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது.

கிருமித் தொற்றால் ஜூன் 27 அன்று ஒன்­றரை வய­துக் குழந்தை மாண்டது. 'என்­செ­ஃபா­லி­டிஸ்' எனப்­படும் மூளை வீக்­கத்­தால் அக்குழந்தை உயி­ரி­ழந்­த­தாக சுகாதார அமைச்சு குறிப்­பிட்­டிருந்தது. இந்த குழந்தைக்கும் மருத்துவ பிரச்சினை ஏதும் இல்லை எனக் கூறப்பட்டது.