சிங்கப்பூரில் மொத்தம் 409 எறும்பு வகைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மற்ற உலக நகரங்களுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூரில்தான் ஆக அதிகமான எறும்பு வகைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அண்மைய ஆய்வில் 121 புதிய எறும்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 34 வகைகள் சிங்கப்பூரில் மட்டும் காணப்படுகின்றன.
409 எறும்பு வகைகள் என்பது ஒரு குறைவான மதிப்பீடுதான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இன்னும் பல வகைகள் சிங்கப்பூரில் இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

