ஆடம்பரப் பொருள்களை வாங்கித் தருவதாகக் கூறி, அவற்றை விநியோகிக்காமல் ஏமாற்றியதாக ஒரு தம்பதியை 'இண்டர்போல்' எனும் அனைத்துலகக் காவல் துறை தேடிவருகிறது.
குறைந்தபட்சம் $32 மில்லியன் மதிப்புள்ள பொருள்களை இந்தத் தம்பதி விநியோகிக்கவில்லை என்று அவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இந்தப் பொருள்களில் பொரும்பாலானவை சொகுசு கைக்கடிகாரங்கள்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில், சென்ற மாதம் 27ஆம் தேதி 26 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரது கடப்பிதழ் முடக்கப்பட்டு, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது 27 வயதான மனைவியும் விசாரணைக்கு உதவிவந்தார். பின்னர் இருவரும் மாயமாகிவிட்டனர்.
அந்தப் பெண் தாய்லந்துவாசி என்று நம்பப்படுகிறது. இருவருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இண்டர்போலும் இவர்களைத் தேடும் முயற்சியாக 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.
இந்தத் தம்பதி இம்மாதம் 4ஆம் தேதி தப்பிச் செல்ல உதவியதாக 40 வயது மலேசிய ஆடவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார்.

