சட்ட நிறுவனங்களுக்கான புதிய தொழில்நுட்பத் தளம்

சட்ட நிறுவனங்களுக்கான புதிய தொழில்நுட்பத் தளம்

1 mins read
80f02739-f548-4e32-92b9-78236dfc8e33
சிங்கப்பூரின் சட்ட நிறுவனங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது புதிய சட்டத் தொழில்நுட்பத் தளத்தின் நோக்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சட்ட அமைச்சு நேற்று உச்ச நீதி­மன்­றத்­தில் புதிய சட்­டத் தொழில்­நுட்­பத் தளத்தை அதி­கா­ர­பூர்­வ­மாக நடப்­புக்­குக் கொண்­டு­வந்­துள்­ளது.

'லுப்ல்' (Lupl) தொழில்­நுட்ப நிறு­வ­னத்­து­டன் இணைந்து அமைச்சு இதனை உரு­வாக்­கி­யுள்­ளது.

வெவ்­வேறு சட்­டப் பிரி­வு­களில் பணி­யாற்­றும் 100க்கும் மேற்­பட்ட வழக்­க­றி­ஞர்­க­ளி­டம் இருந்து திரட்­டப்­பட்ட கருத்­து­கள் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­ட­தாக அது தெரி­வித்தது.

சிங்­கப்­பூ­ரின் சட்ட நிறு­வ­னங்­கள் அவற்­றின் அன்­றாட வேலை­களை நெறிப்­ப­டுத்த இந்­தப் புதிய தளம் உத­வும். இதன் மூலம் வழக்கு விவ­ரங்­களை நிர்­வ­கித்­தல், ஆவ­ணப் பரி­மாற்­றம், கட்­டண விவ­ரங்­க­ளைக் கையா­ளு­தல் போன்­றவை எளி­தா­கக்­கூ­டும்.

சட்ட நிறு­வ­னங்­கள் இந்­தத் தொழில்­நுட்­பத் தளத்­தைப் பயன்­படுத்­து­வ­தற்­கும் இதற்­குத் தேவைப்­படும் கரு­வி­களில் முத­லீடு செய்­ய­வும் ஆகும் முதற்­கட்ட செல­வு­களுக்கு அமைச்சு கைகொ­டுக்­கும்.

இந்த நிதி­யு­த­வித் திட்­டத்­துக்கு 'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பும் தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் ஆத­ரவு அளிக்­கின்­றன.

வெவ்­வேறு வகை­யான வழக்கு­களுக்­கான விவ­ரங்­கள், அவை தொடர்­பான கால வரை­யறை, எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­கள், வழக்­கு­க­ளின் அண்மை நிலை, நட­வ­டிக்­கை­க­ளுக்­கான காலக்­கெடு போன்ற பல விவ­ரங்­களை இந்­தத் தளத்­தில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் 'கூகல் டாக்ஸ்', 'வாட்ஸ்­அப்' போன்­ற­வற்­று­ட­னும் எளி­தில் தொடர்பு­ கொள்­ளும் வகை­யில் இந்­தத் தளம் அமைக்­கப்­பட்­டுள்ளது.

வழக்­க­றி­ஞர்­கள் தங்­க­ளி­டம் சட்­டச் சேவை நாடு­வோ­ரி­டம் ஒரே தளத்­தைப் பயன்­ப­டுத்­தித் தொடர்பு­கொள்ள வகை­செய்­வது இதன் நோக்­கம்.

இதனை வழக்­க­றி­ஞர்­கள் அனை­வ­ரி­ட­மும் கொண்­டு­செல்­லும் நிகழ்ச்­சி­கள், பயிற்­சி­கள் போன்­ற­வற்­றுக்கு சிங்­கப்­பூர் வழக்கறிஞர் சங்கத்துடன் இணைந்து செய­லாற்­ற­வி­ருப்­ப­தாக அமைச்சு கூறி­யது.