கொவிட்-19 தொற்றிய நான்கு வயதுச் சிறுமி உயிரிழப்பு

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நான்கு வய­துச் சிறுமி மாண்­ட­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் 12 வய­துக்­குக் குறை­வான சிறா­ரி­டையே இத்­த­கைய இரண்­டா­வது மர­ணம் இது.

சிறுமி, நிமோ­னி­யா­ காய்ச்சலால் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை உயி­ரி­ழந்­தார்; இதற்கு முன் ஆரோக்­கி­ய­மாக இருந்த அவ­ருக்கு மருத்­து­வச் சிக்­கல்­கள் ஏதும் இருந்­த­தில்லை என்று ஊட­கங்­க­ளின் கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இம்­மா­தம் 15ஆம் தேதி சிறு­மிக்கு நுரை­யீ­ரல் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தோன்­றின.

தனி­யார் மருத்­து­வ­ரி­டம் சென்­ற­போது 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­யில் சிறு­மிக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

சிறு­மி­யி­டம் காணப்­பட்ட நோய் அறி­கு­றி­க­ளைச் சமா­ளிக்­கும் மருந்­து­கள் தரப்­பட்­டன. இருப்­பி­னும் அவ­ரது உடல்­நிலை மேம்­ப­ட­வில்லை; அன்­றி­ரவு உடல்­நிலை மேலும் மோச­ம­டைந்து சிறுமி உயி­ரி­ழந்­தார் என்று சுகா­தார அமைச்சு சொன்­னது.

விசா­ர­ணைக்­குப் பிறகு, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்ட நிமோ­னி­யா­வால் சிறுமி மாண்­ட­தாக மரண விசா­ரணை அதி­காரி தெரி­வித்­தார்.

பொது­வாக முதி­ய­வர்­கள், பெரி­ய­வர்­க­ள் ஆகியோரை­வி­டச் சிறுவர்கள் கொவிட்-19 நோய்த்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பாற்­ற­லைப் பெற்­றுள்­ள­தா­கக் கரு­தப்­படு­கிறது. இருப்­பி­னும் சிலர் இவ்­வாறு தீவிர பாதிப்­ப­டை­யும் சம்­ப­வங்­களும் நேர்­வதை அமைச்சு சுட்­டி­யது.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான வல்­லு­நர் குழு ஆகி­ய­வற்­று­டன் இணைந்து, ஐந்து வய­துக்­குக் கீழான பிள்­ளை­க­ளி­டம் தடுப்­பூ­சி­க­ளின் செயல்­தி­றன், பாதிப்பு ஆகி­யவை குறித்து ஆய்­வு­செய்­வ­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!