தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நாளில் 19 பேருந்துச் சேவைகள் பாதிப்பு

தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நாளில் 19 பேருந்துச் சேவைகள் பாதிப்பு

1 mins read
1feaf5e4-80c3-4346-83be-584cdd69c937
-

இம்­மா­தம் 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை தேசிய தின அணி­வ­குப்­பின் முன்­னோட்­டக் காட்சி இடம்­பெ­று­வதை முன்­னிட்டு சில சாலை­கள் போக்­கு­வரத்­துக்கு மூடப்­படும்.

இத­னால் 19 பேருந்­துச் சேவை­கள் பாதிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

'எஸ்­பி­எஸ் டிரான்­சிட்' நிறு­வ­னம் அதன் 15 பேருந்­துச் சேவை­கள் பாதிக்­கப்­படும் என்று நேற்று தெரி­வித்­தது. பேருந்­துச் சேவை கள் 10, 14, 16, 56, 57, 70/70எம், 100, 111, 130, 131, 133, 162M, 195, 196, 502 ஆகி­யவை அவை.

இந்­தப் பேருந்­துச் சேவை­கள் வரும் சனிக்­கி­ழமை காலை 7.30 மணி­யி­லி­ருந்து இரவு 11 மணி வரை­யிலோ பிற்­ப­கல் 3 மணி­யில் இருந்து இரவு 11 மணி வரை­யிலோ பாதிக்­கப்­படும். இந்த நேரங்­களில் இவை மாற்­றுப்­பா­தை­களில் திருப்பி­வி­டப்­படும்.

பேஃபிரண்ட் அவென்யூ, பீச் ரோடு உள்­ளிட்ட பகு­தி­களில் அமைந்­தி­ருக்­கும் பேருந்து நிறுத்­தங்­களை இந்­தப் பேருந்­து­கள் தவிர்க்க நேரி­டும்.

'எஸ்­எம்­ஆர்டி' நிறு­வ­ன­மும் தேசிய தின அணி­வ­குப்­பின் முன்­னோட்ட நாளில் பேருந்­துச் சேவை பாதிப்பு குறித்து நேற்று அறி­வித்­தது.

பேருந்­துச் சேவை­கள் 75, 960, 960E, 961 ஆகிய நான்­கும் இத­னால் பாதிக்­கப்­படும் என்று நிறு­வ­னம் தெரி­வித்­தது.

பீச் ரோடு, பிராஸ் பாஸா ரோடு, காலி­யர் கீ, எஸ்­பி­ள­னேட் டிரைவ், ஃபுல்லர்­டன் ரோடு, ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட், ராபின்­சன் ரோடு ஆகிய பகு­தி­களில் உள்ள பேருந்து நிறுத்­தங்­களைத் தவிர்த்­து­வி­டும்.