‘டிஎஸ்ஓ’ தேசிய ஆய்வுக்கூடத்தின் தற்காப்புத் தொழில்நுட்பக் கண்காட்சி

ஹேரி­யர். இது, செயற்கை நுண்­ண­றி­வாற்­ற­லைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்ட ஒரு தானி­யக்­க இயந்திர மனிதக் கருவி.

நான்கு கால்­க­ளு­டன் நாயை நினை­வு­ப­டுத்­தும் வடி­வ­மைப்பு கொண்ட இது, குறு­க­லான இடங்­க­ளி­லும் செல்­லக்­கூ­டி­யது; படி­க­ளி­லும் ஏற வல்­லது.

நகர்ப்­பு­றச் சூழ­லில் கண்­கா­ணிப்­புக்­குப் பயன்­ப­டக்­கூ­டிய இந்த இயந்­திர மனி­தக் கருவி, உட்­பு­றங்­க­ளின் முப்­ப­ரி­மாண வரை­ப­டைத்தை அவ்­வப்­போதே உரு­வாக்­கும் திறன் கொண்­டது.

'டிஎஸ்ஓ' எனப்­படும் தற்­காப்பு அறி­வி­யல் அமைப்­பின் தேசிய ஆய்­வுக்­கூ­டம் அதன் 50ஆம் ஆண்டு நிறைவை முன்­னிட்டு நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்பட்ட பல்­வேறு புத்­தாக்­கப் படைப்­பு­களில் ஹேரி­ய­ரும் அடங்­கும்.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், இந்த ஆய்­வுக்­கூ­டத்­தின் பணி, சிங்­கப்­பூர் ஆயு­தப் படைக்­கும் தற்­காப்பு அமைச்­சிற்­கும் இன்­றி­ய­மை­யா­தது என்று கூறி­னார்.

முப்­ப­டை­க­ளுக்­குச் சேவை வழங்­கி­ய­தைப் போன்றே சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் நான்­கா­வது பிரி­வான புதிய மின்­னி­லக்க, உளவுச் சேவைப் பிரி­வி­லும் தொடர்ந்து இது முக்­கி­யப் பங்­காற்­றும் என்­றார் அமைச்­சர் இங்.

'டிஎஸ்ஓ' தேசிய ஆய்­வுக்­கூட ஊழி­யர்­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட வரு­கை­யா­ளர்­களும் மட்­டுமே ஒரு வாரம் நீடிக்­கும் இந்­தக் கண்­காட்­சிக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர். ஏறக்­கு­றைய 1,600 ஆய்­வா­ளர்­களும் பொறி­யா­ளர்­களும் இதில் பணி­பு­ரி­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!