'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டு மோசடி: நிறுவன உரிமம் ரத்து

'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டு மோசடி: நிறுவன உரிமம் ரத்து

1 mins read
e614ef27-ed4c-45b4-96de-df278caf55f8
-

'கான்­டி­னென்­டல் டிரா­வல் சிங்­கப்­பூர்' எனும் உள்­ளூர் சுற்­றுப்­ப­யண முக­வ­ரின் உரி­மம் ரத்து செய்­யப்­படு­வ­தாக சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் நேற்று அறி­வித்­தது.

'சிங்­கப்­பூர் ­ரீ­டிஸ்­க­வர்' பற்­றுச்­சீட்டு ('எஸ்­ஆர்வி') தொடர்­பான மோச­டி­யில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் பேரில் இவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முதல் ஐந்து மாதங்­க­ளுக்கு நிறுவனத்தின் உரி­மம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னம், 'எஸ்­ஆர்வி' பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்தி முன்­பதிவு செய்த சில­ருக்கு, தொகை­யில் ஒரு பகு­தி­யைத் திருப்­பித் தந்­த­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் 'எஸ்­ஆர்வி' பற்­றுச்­சீட்டு மோசடி தொடர்­பான சந்­தே­கத்­தின் பேரில் காவல்­துறை இந்­நி­று­வ­னத்­தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது­செய்தது.

அக்­டோ­பர் 2021ல் உரி­மம் ரத்து செய்­யப்­ப­டு­வது குறித்த எச்­ச­ரிக்­கைக் கடி­தம் அனுப்­பப்­பட்­டது. நிறு­வ­னம் இதனை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­தது.

விசா­ரணை தொடர்­கிறது.

'எஸ்­ஆர்வி' பற்­றுச்­சீட்­டு­கள் 18 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­கள் உள்­ளூ­ரில் சுற்­றுப்­ப­யண இடங்­க­ளுக்­குச் செல்வதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் அர­சாங்­கத்­தால் வழங்­கப்­பட்­டவை.

இவற்றை மற்­ற­வர்­க­ளுக்கு விற்­கவோ ரொக்­க­மாக மாற்­றவோ அனு­மதி இல்லை.