செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
65554e61-1a0a-4ee3-9c93-22082e815c8a
-

சட்டவிரோத சூதாட்டம்: 29 பேர் கைது

காவல்­துறை அதி­கா­ரி­கள் கடந்த ஞாயி­றன்று தீவு முழு­வ­தும் நடத்­திய சோத­னை­யில் சட்­ட­வி­ரோத சூதாட்­டம் தொடர்­பில் 29 பேர் பிடி­பட்­ட­னர். அவர்­களில் ஐவர் பெண்­கள்.

கைது செய்­யப்­பட்ட அத்­தனை பேரும் 32க்கும் 75க்கும் இடைப்­பட்ட வய­தி­னர். அவர்­க­ளி­டம் இருந்து $730,000 மதிப்­புள்ள ரொக்­க­மும் மின்­னி­யல் சாத­னங்­களும் கைப்­பற்­றப்­பட்­டன. கணி­னி­களும் கைப்பே­சி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்ட மின்­னி­யல் சாத­னங்­களில் அடங்­கும். சட்­ட­வி­ரோத சூதாட்­டம் தொட­ர்பான ஆவ­ணங்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். ரெட்­ஹில், புக்­கிட் பாத்­தோக், ஹவ்­காங், ஜூரோங் வெஸ்ட், தேபான் கார்­டன் மற்­றும் தெம்­ப­னிஸ் ஆகிய பகு­தி­களில் காவல்­துறை அதி­கா­ரி­கள் ஒரே நேரத்­தில் சோதனை நடத்­தி­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் இரு ஆட­வர்­கள் மீது இணைய சூதாட்­டத் தடுப்­புச் சட்­டம் 2014ன் கீழ் நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இணைய சூதாட்­டத்தை நடத்­தும் குற்­றத்­துக்கு $200,000 வரை­யி­லான அப­ரா­தம் ஐந்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

ஓசிபிசி வங்கி மோசடிக்காரர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்

ஓசி­பிசி இணைய வங்­கி­யில் நிகழ்ந்த மோசடி தொடர்­பில் நேற்று மார்க் டியோ சின் யான், 31, என்­னும் ஆட­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அத்­து­டன், இணைய வங்கி மோச­டிக்­கும் தொடர்­பில்­லாத இதர பல குற்­றச்­சாட்­டு­களும் இவர் மீது சுமத்­தப்­பட்­டன. இரு பெண்களிடம் $50ம் $250ம் ஏமாற்றியது, இயோ சூ காங் ரோட்டில் ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது போன்றவை அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

முன்­ன­தாக, காவல்­துறை வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், ஓசி­பிசி வங்கி இணைய வங்கி மோச­டிக்கு ஆளான ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கடந்த ஆண்டு டிசம்­பர் 26ஆம் தேதி புகார் ஒன்று கிடைக்­கப் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

"தமது வங்­கிக் கணக்­கில் சட்­ட­வி­ரோ­தப் பணப் பரி­வர்த்­ த­னை­கள் செய்­யப்­பட்டு உள்­ள­தா­க­வும் அதன் கார­ண­மாக தமக்கு $100,000க்கும் மேல் இழப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் தமது புகா­ரில் கூறி­யி­ருந்­தார். புகா­ரின் பேரில் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அவ­ரின் கணக்­கி­லி­ருந்து யுஓபி நிறு­வ­னக் கணக்கு ஒன்­றிற்கு $18,000 பணப் பரி­மாற்­றம் செய்­யப்­பட்­டது முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது," என காவல்­துறை கூறி­யது.

ராயல்ஸ் பியூட்டி என்­னும் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான யுஓபி வங்­கிக் கணக்கை முன்­பின் தெரி­யாத ஒரு­வர் பணம் அனுப்­ப­வும் பணம் பெற­வும் அனு­ம­தித்­த­தாக டியோ மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. $12.80 மில்­லி­யன் ஓசி­பிசி மோச­டி­யில் ஈடு­பட்­ட­ குற்றத்தை முதன்­மு­த­லில் ஒப்­புக்­கொண்ட லியோங் ஜுன் ஸியான், 21, என்பவர் ஓராண்டு காலத்­துக்கு சீர்­தி­ருத்­தப் பயிற்சி மேற்­கொள்ளவேண்­டும் என அண்­மை­யில் உத்­த­ர­வி­டப்­பட்­டது. இவர் தம் மீதான குற்­றத்தை ஏப்­ரல் 20ஆம் தேதி ஒப்­புக்­கொண்­டார். லியோங்­கின் மோச­டி­யோடு டியோ சம்­பந்­தப்­பட்ட வழக்­கு தொடர்­பு­டை­யதா என காவல்­துறை அறிக்கை குறிப்­பி­ட­வில்லை.