தப்பிச் சென்ற தம்பதியை 'இண்டர்போல்' தேடுகிறது

தப்பிச் சென்ற தம்பதியை 'இண்டர்போல்' தேடுகிறது

1 mins read
6dca692b-9643-477c-9997-ec285ff1ded3
-

சிங்­கப்­பூ­ரில் ஆடம்­ப­ரப் பொருள்­களை விநி­யோ­கிக்­கா­மல் ஏமாற்­றி­ய­தாக ஒரு தம்­பதி (படம்) மீது சென்ற மாதம் முதல் 180 புகார்­கள் வந்­துள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்துள்­ளது.

குறைந்­த­பட்­சம் $32 மில்­லி­யன் பெறு­மான பொருள்­களை இந்­தத் தம்­பதி விநி­யோ­கிக்­க­வில்லை என்­றும் இந்­தப் பொருள்­களில் பொரும்­பா­லா­னவை கைக்­க­டி­கா­ரங்­கள் என்­றும் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறி­கிறது. டிரேட்­னே­ஷன், டிரேட்­லக்­சுரி ஆகிய இரு நிறு­வ­னங்­

க­ளுக்கு எதி­ராக புகார்­கள் வரப்­பெற்­ற­தாக காவல்­துறை கூறி ­யது.

ஆடம்­பர கைக்­க­டி­கா­ரம் மற்­றும் கைப்­பை­களை விநி­யோ­கிக்க இந்த நிறு­வ­னங்­க­ளி­டம் முன்­தொகை செலுத்­தப்­பட்­ட­தா­க­வும் ஆனால் பொருள்­கள் விநி­யோ­கி­க்கப்படவில்லை என்­றும் புகார்­களில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இச்­சம்­ப­வம் தொடர்­பில், சென்ற மாதம் 27ஆம் தேதி 26 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரது கடப்­பி­தழ் முடக்­கப்­பட்­டு, பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். அவ­ரது மனை­வி­யான 27 வய­துப் பெண் விசா­ர­ணைக்கு உத­வி­வந்­தார். பின்­னர் இரு­வ­ரும் மாய­மா­கி­விட்­ட­னர். அப்­பெண் தாய்­லாந்து­ வாசி என நம்­பப்­ப­டு­கிறது.

இரு­வ­ருக்­கும் எதி­ராக கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்டுள்­ளது.

'இண்­டர்­போல்' எனப்­படும் அனைத்­து­ல­கக் காவல்­து­றை­யும் இவர்­க­ளைத் தேடும் முயற்­சி­யாக 'ரெட் அலர்ட்' விடுத்­துள்­ளது. இந்­தத் தம்­பதி இம்­மா­தம் 4ஆம் தேதி தப்­பிச் செல்ல உத­வி­ய­தாக 40 வயது மலே­சிய ஆட­வர் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்­டார்.