$169,000 காப்புறுதித் தொகையைப் பெற ஆள் இல்லை

$169,000 காப்புறுதித் தொகையைப் பெற ஆள் இல்லை

1 mins read
29eac728-5e09-4329-864f-272905624af0
-

அழகு நிலை­யங்­கள் மற்­றும் நல்­வாழ்வு நிலை­யங்­கள் மூடப்­பட்­ட­தால் பய­னீட்­டார்­க­ளுக்கு வழங்­கப்­ப­டக்­

கூ­டிய $169,000 காப்­பு­று­தித்தொகை­ கேட்­பா­ரற்று இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. இதன் பய­னா­ளர்­

க­ளான 580 பய­னீட்­டா­ளர்­க­ளைத் தொடர்­பு­கொள்ள இய­ல­வில்லை அல்­லது பதி­ல­ளிக்க முன்­வ­ர­வில்லை. கேஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் ஓர் அங்­க­மான 'கேஸ்­டி­ரஸ்ட்' அமைப்பு நிறு­வன அங்­கீ­கா­ரத்­திற்­குப் பொறுப்பு வகிக்­கிறது. தனது அங்­கீ­கா­ரம் பெற்ற நிறு­வ­னங்­கள் இடை­யில் மூடப்­பட்­டால் அதன் பய­னீட்­டா­ளர்­கள் முன்­கூட்­டியே செலுத்­திய தொகை பாதிக்­கப்­படா வண்­ணம் அவர்­கள் காப்­பு­று­தித் தொகை பெற இது உத­வு­கிறது. அந்த வகை­யில், 2017 ஆம் ஆண்டு முதல் இவ்­வாண்டு ஜூன் வரை 28 அழகு நிலையங்­கள் மற்­றும் நல்­வாழ்வு நிலை­யங்­கள் மூடப்­பட்­ட­தால் அவற்­றின் பய­னீட்­

டா­ளர்­க­ளுக்­குக் காப்­பு­று­தித் தொகை வழங்க கேஸ்­டி­ரஸ்ட் ஏற்­பாடு செய்­தது. 2017ஆம் ஆண்டு முதல், பாதிக்­கப்­பட்ட 512 பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு இந்த அமைப்பு $280,000 தொகை பெற உத­வி­யது.