சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியான நான்கு வயது சிறுமிக்கு முதலில் கிருமித்தொற்று ஏற்படவில்லை.
ஏஆர்டி பரிசோதனைகளில் ராய்சியா உஃபாய்ரா முகம்மது ஆஷ்ரஃப் எனும் அந்தச் சிறுமி கிருமித்தொற்றுக்கு ஆளாகாதது தெரியவந்தது.
எனினும் ஜூலை 15ஆம் தேதியன்று அவருக்குக் காய்ச்சல், தொண்டைவலி போன்ற நோய்க்கான அறிகுறிகள் இருந்தன.
இதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் குடும்பத்தில் வேலை செய்யும் பணிப்பெண் கிருமித்தொற்றுக்கு ஆளானது தெரியவந்ததாக ராய்சியாவின் தாய் திருவாட்டி மர்டலினா முகம்மது நொசி தெரிவித்தார்.
ஜூலை 17ஆம் தேதியன்று ராய்சியாவின் உடல்நலம் மோசமடைந்தது.
அன்றிரவு அவர் மருத்துவமனையில் மாண்டார்.
ராய்சியா, சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியான 12 வயதுக்குக்கீழ் உள்ள இரண்டாவது பிள்ளை.

