தவறுதலாக கூடுதல் $4.22 மில்லியன் வழங்கிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அரசாங்க அமைப்பு, அதன் மானியங்களில் ஏற்பட்ட குளறுபடியால், தவறுதலாக $4.22 மில்லியன் மதிப்பிலான கூடுதல் மானியங்களை அளித்துள்ளது.

அரசாங்கக் கணக்குகளை ஒவ்வோர் ஆண்டும் சரிபார்க்கும் தலைமை கணக்காய்வாளர் அலுவலகம், 2021/2022 நிதியாண்டுக்கான அரசாங்கக் கணக்காய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டபோது இதைத் தெரிவித்தது.

திறன் மேம்பாட்டு தீர்வை நிதியைப் பெறுவதில் அமைப்பு 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மெத்தனமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்புக்கு $43 மில்லியன் திருப்பிக் கிடைக்க வேண்டியுள்ளது.

அரசாங்கம், மூன்று அரசாங்கம் சார்ந்த அமைப்புகள், அரசாங்கம் வைத்திருக்கும் நான்கு நிறுவனங்கள், மேலும் இரண்டு கணக்குகள் ஆகியவற்றின் நிதி அறிக்கைகளைப் பற்றி மாற்றப்படாத கணக்காய்வுக் கருத்தைத் தந்தது.

அரசாங்கக் கணக்குகளின் கணக்காய்வு நிறைவுதந்ததாகவும் கணக்காய்வுத் தர விதிமுறைகளுக்கு ஏற்ப அவை இருந்ததாகவும் இது பொருள்படும்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பின் மானியங்கள் நிர்வகிக்கப்பட்ட முறையில் ஏற்பட்ட தவறுகளைத் தலைமை கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியது.

தகுதிபெற்றவர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதைச் சரியாக கண்காணிக்காதது அவற்றில் ஒன்று.

பயிற்சியளித்த நிறுவனங்கள் சமர்ப்பித்த நிதி சம்பந்தப்பட்ட கோரிக்கைகளைப் போதிய அளவில் சரிபார்க்காதது மற்றொரு தவறாகும்.

தவறுகளைச் சரிசெய்ய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!