தேசிய தின அணிவகுப்புப் பைகளை அடுக்கும் இயந்திரம்

தேசிய தின அணிவகுப்புப் பைகளை அடுக்கும் இயந்திரம்

1 mins read
6864eb89-fddf-496d-828c-054b885472d6
ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட படங்கள் இயந்திரங்கள் அணிவகுப்புப் பைகளுக்குள் தின்பண்டங்களை போடுவதைக் காட்டின. படம்: சிங்கப்பூர் ராணுவம் / ஃபேஸ்புக் -

தேசிய தின அணிவகுப்புப் பைகளை அடுக்கிவைக்க சிங்கப்பூர் ராணுவம் முதன்முறையாக இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது.

இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் குறைந்த ஆள்பலம் தேவைப்படும் வேளையில் செயல்திறன் கூடுவதாக ராணுவம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று (19 ஜூலை) தெரிவித்தது.

தேசிய அணிவகுப்பின் வர்த்தக செயல்பாட்டுக்கு உதவக்கூடிய இயந்திரமய வழிகளைப் பற்றி கடந்த ஆண்டு கொவிட்-19 சூழலில் ஆராய்ந்ததாக தேசிய அணி வகுப்புப் பைகளின் தயாரிப்புக்கு பொறுப்பு வகிக்கும் மேஜர் சுவா பூன் கியட் கூறினார்.

முந்தைய ஆண்டுகளில் முழுநேர தேசிய சேவையாளர்கள், சிறைக் கைதிகள் போன்றோர் அணிவகுப்புப் பைகளை அடுக்கிவைத்தனர்.