டியோ சீ ஹியன்னுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

டியோ சீ ஹியன்னுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
6de651eb-ea7c-46c2-bcb2-8a6346fdd826
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

தமக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதை உறுதிப்படுத்தும் ஏஆர்டி பரிசோதனை முடிவைக் காட்டும் படத்தை தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமையன்று (20 ஜூலை) பதிவேற்றம் செய்திருந்தார்.

"இன்று காலை ஏஆர்டி பரிசோதனையை மேற்கொண்டேன், கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டாது கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதுதான் நான் எடுத்துக்கொண்ட ஆக முக்கியமான தவிர்ப்பு நடவடிக்கை. இதுவரை கடுமையல்லாத நோய்க்கான அறிகுறிகளே இருக்கின்றன, இவ்வாறே தொடர்ந்து இருக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று 67 வயது திரு டியோ குறிப்பிட்டார்.