அதிகாரிகளிடமிருந்து அதிரடியாகத் தப்பிச் செல்ல முயன்ற ஏழு மாத கர்ப்பிணி

அதிகாரிகளிடமிருந்து அதிரடியாகத் தப்பிச் செல்ல முயன்ற ஏழு மாத கர்ப்பிணி

1 mins read
e75293d4-f0dc-41e6-9714-089aac7c7c7c
தப்பிக்க முயன்ற மாது மீட்கப்பட்டார். படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு / ஃபேஸ்புக் -

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடமிருந்து ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்த மாது தனது வீட்டின் சன்னலிலிருந்து வெளியேறி தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்.

11வது மாடியில் உள்ள வீட்டில் தங்கிய அவர் குளிர் சாதனப் பெட்டியின் குழாய்க்கு அருகே கட்டடத்தின் எட்டாவது மாடிக்கு இறங்கியதாக சம்பவத்தைப் பற்றி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமையன்று (20 ஜூலை) ஃபேஸ்புக்கில் விவரித்தது.

மாது இருந்த பகுதிக்கு அருகே உள்ள மாடிப்படிக்கு அதிகாரி ஒருவர் வேகமாகச் சென்று அவரை அமைதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாது மேலும் தனக்கு எந்த வகையிலும் ஆபத்தை விளைவித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை மீட்டனர்.

மாதுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாவிட்டாலும் அவர் கர்ப்பமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.