சுமார் 32 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொகுசுப் பொருள்கள் மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவரின் அடையாளத்தைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 26 வயது ஆடவர் பி ஜியாபெங், தாய்லாந்தைச் சேர்ந்த பன்சுக் சிரிப்பாவா எனும் 27 வயது பெண் ஆகியோர் சந்தேக நபர்கள் ஆவர்.
ஜூலை மாதம் நான்காம் தேதியன்று இவர்கள் லாரியின் கொள்கலனில் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் வாங்கிய சொகுசுப் பொருள்களை அவர்களுக்கு அனுப்பாமல் இருந்ததாக இவர்கள் மீது சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களைப் பற்றிய தகவல் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கான கைதாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தேடப்படுபவர்கள் என்ற அறிக்கையையும் 'இன்டர்போல்' எனும் அனைத்துலகக் காவல்துறை விடுத்துள்ளது.

