ராஜபக்சேக்கு சிங்கப்பூர் குறுகிய கால விசாவை வழங்கியது

ராஜபக்சேக்கு சிங்கப்பூர் குறுகிய கால விசாவை வழங்கியது

1 mins read
3da17741-91c3-4ea3-887d-e96f2c5d073a
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேக்கு சிங்கப்பூர் குறுகிய காலத்துக்கான விசாவை வழங்கியதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்வோருக்கு 30 நாள்களுக்கான 'சோஷியல் விசிட்' எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும் என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆணையம் புதன்கிழமையன்று (20 ஜூலை) பதிலளித்தது.

அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும்.

திரு ராஜபக்சேக்கு 14-நாள் விசா வழங்கப்பட்டதென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.