நீடித்த நிலைத்தன்மைக்கு பொதுச்சேவை உபகாரச்சம்பளம்

நீடித்த நிலைத்தன்மைக்கு பொதுச்சேவை உபகாரச்சம்பளம்

1 mins read
3934f432-3f2e-4793-84f2-479cdb59e7ad
-

பொதுச் சேவைப் பிரிவு நீடித்த நிலைத்­தன்­மைக்­காக புதிய உப­கா­ர­சம்­ப­ளங்­களை வழங்­க­வுள்­ளது. வரும் செப்­டம்­பர் மாதம் முதல் அவற்­றுக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

உப­கா­ரச் சம்­ப­ளம் பெறு­வோ­ருக்கு அர­சாங்­கத்­தின் நீடித்த நிலைத்­தன்மை கொள்கை வகுத்­தல், அது சார்ந்த நட­வ­டிக்­கை­கள ஆகி­ய­வற்­றில் பணி­யாற்ற வாய்ப்பு கிடைக்­கும். பொதுச் சேவை பிரிவு நேற்று அதைத் தெரி­வித்­தது.

புதிய உப­கா­ரச்­சம்­ப­ளம் பரு­வ­நிலை மாற்­றத்­தைச் சமா­ளிக்­கும் சிங்­கப்­பூ­ரின் ஆற்­றலை மேம்­ப­டுத்த உத­வும் என்று கல்வி அமைச்­ச­ரும் அர­சாங்­கச் சேவைப் பிரி­வுக்கு பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு சான் சுன் சிங் தெரி­வித்­தார். பொதுச் சேவை ஆணை­யத்­தின் உப­கா­ரச்­சம்­பங்­களை வழங்­கும் நிகழ்ச்­சி­யில் அவர் பேசி­னார்.

சிங்­கப்­பூர் போன்ற நகர நாடு ­க­ளுக்கு பரு­வ­நிலை மாற்­றம் பெரிய அச்­சு­றுத்­தல் என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

நிகழ்ச்­சி­யில் மொத்­தம் 66 மாண­வர்­க­ளுக்கு உப­கா­ரச்­சம்­ப­ளங்­கள் வழங்­கப்­பட்­டன. அவர்­கள் சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பட்­ட­ப­டிப்­பைப் பயி­ல­வுள்­ள­னர்.